Chia Seeds: சியா விதையுடன் இதை சாப்பிடாதீங்க.. அதிக பிரச்சனை ஏற்படுமாம்
உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் சியா விதையுடன் சாப்பிடக்கூடாத உணவுகளை குறித்து தெரிந்து கொள்வோம்.
சியா விதைகளை எந்த உணவுடன் சாப்பிடக்கூடாது?
சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் சத்துக்கள் உள்ளது. இதனை பெரும்பாலும் ஸ்மூத்தி, தயிர் போன்ற உணவுகளுடன் சாப்பிடுவார்கள்.
ஆனால் சில உணவுகள் சியா விதை ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கக்கூடாது. அதனையும் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
30 கிராம் சியா விதையில் 11 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதனை பிற நார்ச்சத்து உணவுகளான முழு தானியம், பீன்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது செரிமான மண்டலத்தில் சிக்கலை உண்டாக்கலாம். வயிறு உப்புசம், வாயு போன்றவை ஏற்படலாம்.
சோடா, ஐஸ் டீ போன்ற சர்க்கரை பானங்களில் சியா விதையை சேர்ப்பது, அதன் நன்மைகைளை குறைக்க செய்வதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு கலோரி நுகர்வும் அதிகரிக்கக்கூடும்.
பூ வடிவ காய்கறிகளான ப்ரோக்கோலி, காலிஃப்ளவர், பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்றவற்றுடன் சேர்த்து சியா விதைகளை சாப்பிடக்கூடாது. சிலருக்கு வாயு மற்றும் வயிறு உப்புசம் உண்டாக்கலாம். இவை இரண்டிலும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அதனை ஒன்றாக சாப்பிடுவது வயிறு அசௌகரியத்தை உண்டாக்கும்.
Image credit: Tim UR | Shutterstock
சியா விதைகளில் பைடிக் அமிலம் உள்ளது. இவை இரும்பு உட்பட சில தாதுக்களின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதலை தடுக்க செய்கின்றது. எனவே கீரை, சிவப்பு இறைச்சி, பருப்பு போன்றவற்றுடன் சியா விதையை சேர்த்து சாப்பிடக்கூடுாது. இவை உடல் உணவில் இருந்து இரும்புச்சத்து பெறுவதை தடுக்கக்கூடும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியுடன் சியா விதைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த இறைச்சியில், ஆரோக்கியமற்ற கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சியா விதையை சாப்பிடும் போது, நன்மைகள் உடம்பிற்கு கிடைக்காமல் போகலாம்.
காபி அல்லது எனர்ஜி ட்ரிக் போன்ற டையூரிடிக் பானங்களுடன் சியா விதையை சேர்ப்பது அதிகமான திரவத்தை உறிஞ்சி நீரிழப்புக்கு வழிவக்கும். காபியுடன் இதனை சாப்பிட்டால் வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
வறுத்த உணவுகளுடன் சியா விதையை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். அதாவது பிரெஞ்சு ப்ரைஸ், ப்ரைடு சிக்கன் இவற்றுடன் சாப்பிட்டால் அதன் சத்துக்கள் குறைவதுடன், அழற்சியையும் ஏற்படுத்துமாம்.
சியா விதைகள் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் உள்ள நிலையில், இதனை உப்பு அதிகமுள்ள சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |