ஐந்து தலைமுறைகள்... ஒரே பிறந்தநாள்! கின்னஸ் சாதனை படைத்த குடும்பம்
Five Generations, One Birthday -American Family Makes Guinness World Records : அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் ஐந்து தலைமுறையினர் அனைவரும் ஒரே திகதியில் பிறந்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
தலைமுறைகள் மாறினாலும் பிறந்தநாள் மட்டும் மாறாமல் தொடர்ந்திருப்பது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1907இல் ஆரம்பித்த அபூர்வ ஒற்றுமை
இந்த வியப்பூட்டும் நிகழ்வு 1907ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி வில்பர் ஹார்லோ பிறந்ததுடன் ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து, அவரது மகள் அடீ ஹார்லோ 1949ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதியும், பேரன் டொனால்ட் ஹார்லோ 1972ஆம் ஆண்டு அதே திகதியிலும் பிறந்தனர்.
பின்னர், டொனால்டின் மகள் எம்மா பெல் 1997ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி பிறந்தார்.இந்த அபூர்வ ஒற்றுமையை மேலும் வியப்பூட்டும் வகையில், எம்மாவின் மகன் ஆர்தர் பெல் 2025ஆம் ஆண்டு அதே திகதியில் பிறந்தார்.
இதன் மூலம், ஒரே குடும்பத்தில் ஐந்து தலைமுறையினர் ஒரே பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்ளும் அபூர்வ நிகழ்வு சாத்தியமாகியுள்ளது.இதற்கு முன்னர் நான்கு தலைமுறையினர் ஒரே நாளில் பிறந்ததே சாதனையாகக் கருதப்பட்டது.
அந்தச் சாதனையை முறியடித்து, பெல் மற்றும் ஹார்லோ குடும்பத்தினர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

நான்கு தலைமுறைகளாகவே இந்தப் பிறந்தநாள் ஒற்றுமை தங்கள் குடும்பத்தில் தொடர்வதை அறிந்திருந்ததாகவும், ஐந்தாவது தலைமுறையினரும் அதே நாளில் பிறக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்ததாகவும் எம்மா தெரிவித்துள்ளார்.எனினும், இந்த மகிழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான அம்சமும் உள்ளது.
எம்மாவின் பாட்டியான அடீ ஹார்லோ, 2023ஆம் ஆண்டு உயிரிழந்ததால், தனது ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த ஆர்தரைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

இந்தக் குடும்பத்தினர் ஒவ்வொரு செப்டெம்பர் 14ஆம் திகதியையும் ஒன்றாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.உணவகங்களுக்குச் சென்று பிறந்தநாள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
மேலும், ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு வில்பரும் அவரது மனைவியும் திருமணம் செய்துகொண்ட மிசூரி மாநிலத்தின் மேரிவில் நகரத்திலேயே, பின்னர் எம்மாவும் அவரது கணவர் வையட்டும் சந்தித்துள்ளனர் என்பதும் மற்றுமொரு ஆச்சரியமான ஒற்றுமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |