அல்டிமேடிலிருந்து வெளியேறிய வனிதாவின் தற்போதைய நிலை.... மூத்த மகளுடன் எப்படி இருக்கின்றார்?
அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய வனிதா தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் அலடிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை வனிதா கூறியுள்ளார்.
14 போட்டியாளர்களுடன் தொடங்கி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வனிதா, வந்த நாளிலிருந்தே பிக் பாஸ் வீட்டின் முதலாளி போல செயல்பட்டு வந்தார்.
வந்ததும் வராததுமாக காஃபி பொடிக்காக சண்டை போட்டு பிரச்சினை கிளப்பினார். அது மட்டும் இல்லாமல் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதை செய்யாமல் மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்து அட்டகாசம் செய்தார்.
போனவாரம் பிக் பாஸ்வீட்டின் கேப்டனாக இருந்த வனிதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் தருவீர்கள் என கமல் கேட்டார். இதற்கு பலரும் அவர் கேப்டனாக இருந்து எதுவுமே செய்யவில்லை அவருக்கு மதிப்பெண்ணே கொடுக்கக்கூடாது என கூறி ஒன்னு, இரண்டு மதிப்பெண்களை கொடுத்தனர்.
இதனால், ஆத்திரத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் வனிதா. இதையடுத்து, கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து மிகவும் சோர்வாக இருந்த வனிதா, வீட்டை விட்டு அனுப்பும் படி பிக் பாஸிடம் கதறி அழுதார்.
அவரை சமாதானப்படுத்திய பிக் பாஸ், தைரியமாக இருங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
வீட்டில் ஒரு நாள் தாக்குபிடித்த வனிதா மீண்டும், கமலுக்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தேன், இனியும் இந்த வீட்டில் இருக்க முடியாது , வெளியே போக வேண்டும் என அடம்பிடித்தார்.
பிக் பாஸ் எவ்வளவு சமாதானப்படுத்தியும் முடிவை மாற்றிக்கொள்ளாத வனிதா வீட்டை விட்டுவெளியேறினார். இந்நிலையில், வனிதா தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.
அதில், ரம்யாகிருஷ்ணன் வருவதால் நான் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவில்லை. பொய்யான தகவலை பரப்பாதீர்கள்.
என்னுடைய உடல்நிலையையும், மனநிலையையும் கருத்தில் கொண்டுதான் நான் இந்த முடிவை எடுத்தேன். என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு எனக்கு உதவிய ஹாஸ்டார் நிறுவனத்திற்கும், பிக் பாஸ் அல்டிமேட் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.