நாய்கள் அடிக்கடி செருப்பை கடிக்க என்ன காரணம்னு தெரியுமா?
பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு செல்லப் பிராணியாக நாய் காணப்படுகின்றது. உலகில் விசுவாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் இது நிச்சயம் நாயாக மட்டும் தான் இருக்க முடியும்.
நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சையமான பிராணியாக இருந்தாலும் நாயிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும் நாயின் உடல் அமைப்பில் காணப்படும் சில விசேட அம்சங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அந்த வகையில் நாய்கள் அடிக்கடி செருப்பை கடித்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும்.நாய்கள் செய்யும் இந்த விஷயங்கள் நமக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தலாம்.
ஆனால் நாய்களின் இந்த செயல்களுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காரணம் என்ன?
பொதுவாக நாய்கள் மனிதனின் காலணிகளை கடிப்பதற்கும், ஆடைகளை கடித்து கிழிப்பதற்கு காரணம் அது அந்த நபரை நேசிப்பதான் என வல்லுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் குறிப்பிட்ட நறுமணம் பிடித்ததால் அதை தக்க வைத்து கொள்ளவதறடகாகவும் நாய்கள் பிடித்தமாகவர்களை பிரியும் போது ஏற்படும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமலும் இவ்வாறு செருப்பை கடிக்கின்றன.
சில நேரங்களில் கடுமையான பசியின் வெளிப்பாடாகவும் நாய்கள் காலணிகளை கடிப்பதை பழக்கமாக வைத்திருக்கின்றன.
அதுமட்டுமன்றி நாய்கள் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும், அவை அடிக்கடி செருப்புகளை கடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றன.
ஆனால் நாய் குட்டிகள் இது போன்று செயல்களில் ஈடுபடுவது விளையாட்டுக்கானவும் இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |