ஆக்ரோஷமாக மாறும் பாம்புகள்... எச்சரிக்கும் வனத்துறை! என்ன காரணம் தெரியுமா?
பொதுவாகவே பருவமழை காலங்களில் வெள்ளத்திற்கு அஞ்சி பாம்புகள் வீடுகளுக்குள் நுழையும் அபாயம் இருப்பதால், பாம்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துவது வழக்கம்.
மேலும் ஆக்டோபர் முதல் டிசம்பர் வரையாக காலப்பகுதி, பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால், பாம்புகள் ஆக்ரோஷமாக இருக்கும்.

அதனால் சாதாரண காலங்களை விடவும் பாம்புகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம். இதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
காரணம் என்ன?
இனப்பெருக்க காலங்களின் போது பாம்புகள் ஒரு வசீகர தன்மையுடன் இருக்குமாம். அதன் போது ஒரு பெண் பாம்பு வெளியிடும் பெரோமோன் என்ற ரசாயன வாசனை திரவியத்தின் பின்னால் பல ஆண் பாம்புகள் போட்டிப்போட்டுக்கொண்டு செல்லும்.

அதன் போது, ஆண் பாம்புகள், தூரம் மற்றும் சுற்றுப்புறங்கள் குறித்த உணர்வை முற்றிலும் இழந்துவிடுகின்றன.அதாவது அது காதல் வயப்பட்டிருப்பதால் அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது பற்றிய உணர்வை இழந்துவிடுகின்றது.
மேலும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான ஆண் பாம்புகள் மட்டுமே பெண் பாம்புகளுடன் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கின்றது என்பதால், இந்த போட்டித்தன்மை காரணமாக, இனச்சேர்க்கை தேடல்கள் ஆபத்தான சண்டைகளாக மாற வாய்ப்பு அதிகம்.

அதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் காணப்புடுகின்றது.எனவே தான் வனத்துறை பொதுமக்ளை டிசம்பர் வரை பாம்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |