தேனை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாம்! எச்சரிக்கை
தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். பழங்காலம் தொட்டே தேனை நாம் பயன்படுத்தி வருகிறோம். தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு.
70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது.
இருப்பினும் இதனை சில உணவுகளோடு சேர்த்து சாப்பிட கூடாது. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நெய் மற்றும் தேன் ஒரு அபாயகரமான கலவையாக ஆகும். மேலும் அவை எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டும். தேனுடன் கலக்கக் கூடாத உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.
முள்ளங்கி மற்றும் தேன் ஆகியவை உடலில் நச்சுப் பொருள்களை உருவாக்கலாம். எனவே சாலட் செய்து அதில் தேனைச் சேர்க்கும்போது, முள்ளங்கியைத் தவிர்க்க வேண்டும்.
தேன் மற்றும் இறைச்சி பொருட்கள் ஒன்றோடொன்று பொருந்தாது. எனவே இதை இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளும்போது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சூடான நீரில் தேனைச் சேர்ப்பது மனித உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் ஹைட்ராக்ஸிமெதில் ஃபர்ஃபுரால்டிஹைட் (எச்.எம்.எஃப்) அதிகரிப்புக்கு காரணமாகிறது.
சூடான நீருடன் தென் கலந்து சாப்பிட்டுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பாலை மற்ற உணவுகளுடன் இணைக்க வேண்டாம். ஏனெனில் இது தவறான உணவு சேர்க்கை ஆகும்.