குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடலாமா? மருத்துவத்துடன் கூடிய விளக்கம்- தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக கடற்கரை போன்ற இடங்களில் சிற்றுண்டியாக அனைவரும் வேர்க்கடலையை தான் வாங்கி உண்பார்கள்.
இவ்வாறு சாப்பிடும் வேர்க்கடலைகள் குளிர்காலத்தில் பல்வேறு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
குளிர்ந்த பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது நமது பசியை பூர்த்தி செய்ய ஒரு சுவையான மற்றும் சத்தான வழி.
அந்த வகையில் குளிர்காலத்தில் வேர்க்கடலைகளை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்பதனை சிலர் வலியுறுத்தி கூறுவார்கள். அப்படியாயின் வேர்க்கடலைகளை ஏன் சாப்பிட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
வேர்க்கடலைகள்
1. குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று இயற்கையாகவே அதிகமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் அரவணைப்பையும் ஆறுதலையும் உணவில் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். அப்படியாயின் இது போன்ற சிறப்புக்கள் வேர்க்கடலையில் அதிகமாகவுள்ளது. ஏனெனின் வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் அதிகமாவுள்ளது.
2. குளிர்காலத்தில் அதிக புரத உள்ளடக்கம் கொண்ட ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள் நமக்குத் தேவை. இதனால் வேர்க்கடலைகளை குளிர்காலத்தில் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் வேர்க்கடலையில் நிலையான புரதம் இருக்கின்றது.
3. குளிர்காலத்தில் சளி, இருமல் பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாகவுள்ளது. வேர்க்கடலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது. அத்துடன் ஒவ்வாமையிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்ளவும் உதவியாக இருக்கின்றது.
4. வேர்க்கடலையில் உள்ள பயோட்டின் உள்ளடக்கத்தைக் கொண்டு குளிர்காலத்தில் சரும வறட்சியைத் தடுக்கலாம். இது ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை பெற உதவியாக இருக்கின்றது.
5. பொதுவாக வேர்க்கடலையில் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற முக்கிய தாதுக்கள் அதிகமாக உள்ளது. இது குளிர்காலத்தில் வலுவான எலும்புகளை பராமரிக்க உதவியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |