கோடைக்காலம் வந்தாச்சு.. பழைய கஞ்சி அடிக்கடி குடிங்க- ஆரோக்கிய நன்மைகள் அதிகம்
கோடைக்காலம் வந்துவிட்டால் சூட்டை தணிக்கும் உணவுகள் சாப்பிடுவது அவசியம். இப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து விடும்.
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
அதிலும் குறிப்பாக எமது முன்னோர்கள் பாரம்பரியமாக உட்கொண்டு வந்த பழைய சோற்றில் ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்கள் உள்ளன. ஏனெனின் இதிலுள்ள சத்துக்கள் நமக்கு வரும் நோய்களில் இருந்து விடுதலைப் பெற உதவிச் செய்கிறது.
முந்தைய நாள் சமைத்த சாதத்தில் நீரை ஊற்றி, மறுநாள் காலையில் அந்த சாதத்துடன் தயிர், வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். இந்த பழைய சாதத்தில் பி வைட்டமின்கள், இரும்புச்சத்து, கனிமச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
இந்த கஞ்சி உடலுக்கு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதோடு, உடலுக்கு வேறு பல நன்மைகளையும் வழங்கும்.அப்படியாயின், பழைய சாதத்தை காலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பழைய சாதம் கஞ்சியில் இவ்வளவு பலன்களா?
1 பழைய சாதத்தில் நார்ச்சத்து மற்றும் புரோபயோடிக் அதிகமாக இருக்கும். இது ஃபுட் பாய்சனிங், வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் கொடுக்கிறது. கஞ்சியில் உள்ள ஸ்டார்ச் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, ஆரோக்கியமான குடலியக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம், அசிடிட்டி, வயிற்று உப்புசம் உள்ளிட்ட நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.
2. பழைய கஞ்சியின் நீர் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும். அதிலுள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிதமான அளவில் இருப்பதால், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைத்து, நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு தருகிறது.
3. பழைய கஞ்சியில் பி வைட்டமின்கள், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளும். அதுவும் கோடைக்காலங்களில் வந்துவிட்டால் வரும் ஒரு சில ஆரோக்கிய குறைபாடுகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
4. கோடைக்காலத்தில் கஞ்சியை தினமும் குடித்து வரும் பொழுது உடல் நீண்ட நேரம் நீரேற்றமாக இருக்கும். கோடையில் கஞ்சியைக் குடிக்கும் போது, வியர்வையினால் உடல் வறண்டு போவது குறையும்.
5. பழைய சாதத்தில் அமினோ அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால் தலைமுடி மென்மையாகவும், வலுவாகவும் இருக்கும். தலைமுடி உதிர்வு பிரச்சினையுள்ளவர்களுக்கு மயிர்கால்கள் முதல் முடியின் முனை வரை வலுப்படுத்தி தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |