ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
கோடை காலம் ஆரம்பித்துவிட்டால், சூழல் வெப்பநிலை மட்டுமன்றி உடல் வெப்பநிலையும் வெகுவாக அதிகரித்து பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக கோடையில் அதிக வியர்வையால் நமது உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். அதனை ஈடு செய்யும் அளவுக்கு நீரேற்றமான உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டியது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது.
அந்த வகையில் கோடையில் உடலை குளிர்மையாக வைத்துக்கொள்வதுடன் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ளும் மோர் குழம்பை ஐயர் வீட்டு பாணியில் எவ்வாறு அசத்தல் சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் - 1 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 3
வெள்ளரிக்காய் - சின்ன துண்டு (நறுக்கியது)
இஞ்சி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 3
காய்ந்த மிளகாய் - 3
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி (ஊறவைத்தது)
சீரகம் - 1/2 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து துருவி வைத்து தேங்காயம், சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனை வதக்கிய வெள்ளரிக்கையுடன் சேர்த்து, இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் நன்கு கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து, இதில் ஊற்ற வேண்டும்.இப்போது மீண்டும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
இந்த தாளிப்பை வெந்து கொண்டிருக்கும் குழம்பில் உற்றவும் சிறிது நேரம் கழித்து இறக்கினால் அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ஐயர் வீட்டு மோர் குழம்பு தயார்.
கோடை காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு வாரத்துக்கு இரண்டு முறை இந்த குழம்பை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |