அட இது தெரியாம போச்சே..! பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா?
பொதுவாகவே படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பென்சில் பயன்படுத்தியிருப்பார்கள்.
குறிப்பாக சிறுவர்கழள பொருத்தவரையில் பென்சில் இன்றியமையாத ஒரு விடயமாகவே இருக்கின்றது. பென்சில் பயன்பாட்டுக்கு வந்த நாள் தொடக்கம் இன்று வரையில் இதன் கேள்வி குறையவில்லை.
நாம் அனைவரும் பள்ளி பருவத்தில் பிரபல நிறுவனங்களின் பென்சில்களை அதிகமாக பயன்படுத்தி உபயோகித்திருப்போம்.
ஆனால், பெரும்பாலான பென்சில்கள் ஏன் கருப்பு நிற முனையைக் கொண்டுள்ளன என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
அது வெறுமனே அழகுக்காக வைக்கப்படவில்லை. அதன் பின்னால் நிறுவனங்களின் வியாபார தந்திரோபாயம் ஒன்று ஒளிந்திருக்கின்றது. இந்த ரகரியம் தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.
என்ன காரணம்?
உண்மையில் இது குழந்தைகளின் உளவியலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வியாபார தந்திரமாகும். தங்களின் வியாபரத்தை பல மடங்கு பெறுக்குவதற்கு இந்த சின்ன விடயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
எழுத முடியாதபடி பென்சில் மிகக் குறுகியதாகிவிட்டால், அந்தக் கறுப்புப் பகுதி முடிந்துவிட்டதையும், பிறகு புதிய பென்சிலைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்தே இந்த கறுப்பு பதுதி அமைக்கப்பட்டது.
பென்சிலின் கருப்புப் பகுதியையும் எழுதலாம். ஆனால் பெரும்பாலானோர் இந்த நிலையை அடைந்தவுடன் புதிய பென்சிலைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.
மேலும் பெரும்பாலான நிறுவர்கள் இந்த கறுப்பு பகுதி அமைக்க சிறிது காம் இருக்கும் போதே புதிய பென்சில் வாங்க வேண்டும் என யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
இந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தவே பெரும்பாலான பிரபல நிறுவனங்களின் பென்சில்களின் பின்னால் கருப்பு பகுதி வைக்கப்படுகின்றது.