செல்போனில் இந்த சிறிய துளை எதுக்கு வச்சிருக்காங்க தெரியுமா? பலரும் அறியாத விடயம்
பொதுவாகவே தற்காலத்தில் செல்போன் இல்லாத வாழ்க்கையை நம்மில் பலரால் கற்பனை கூட செய்ய முடியாது.அந்தளவிற்கு செல்போன் நம் வாழ்வில் ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது என்தே உண்மை.
தற்காலத்தில் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே மிகவும் அரிதான விடயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையில் செல்போனை பார்த்தே கண் திறக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
செல்போனின் பல்வேறு விடயங்கள் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருந்தாலும் ஸ்மார்ட்போன்களில் அடிப்பகுதியில் சிறிய துளை எதற்காக இருக்கிறது? அந்தத் துளை மூலம் என்ன பயன் என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
ஸ்மார்ட்போன்களில் அடிப்பகுதியில் சிறிய துளை ஒன்று இருப்பதைப் பார்க்க முடியும். அந்தச் சின்ன துளை எதற்காக இருக்கிறது? அந்தத் துளை மூலம் என்ன பயன் என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
என்ன காரணம்?
இந்த மிகச் சிறிய துளை தான் இரைச்சலை நீக்கும் மைக்ரோபோன். போனில் பேசும்போதும் இந்த மைக்ரோபோன் செயல்படுவதால்தான் குரலைத் தெளிவாகக் கேட்க கூடியதாக இருக்கின்றது.
நாம் மொபைலில் யாருக்காவது போன் செய்யும்போது, நமது குரலை இரைச்சல் இல்லாமல் மறுமுனையில் உள்ளவர் தெளிவாகக் கேட்கும் வகையில் மாற்றிக் கொடுப்பது இந்த மைக்ரோபோன்தான்.
இந்த மைக்ரோபோன் எல்லா சத்தங்களையும் உள்வாங்கிக்கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் துளை ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் இருப்பதால் குரல் மறுமுறையில் உள்ளவருக்கு தெளிவாக கேட்கும்.
இதேபோல ஸ்பீக்கர் துளைகள், சார்ஜர் துளை, இயர்போன் துளை போன்றவையும் இருக்கும். சிம் கார்டு மற்றும் மெமரி கார்களுக்கான துளை பெரும்பாலும் செல்போனின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |