எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர்
எகிப்து கல்வெட்டில் தமிழன் பெயர் பொறிக்கபட்டுள்ளது.
எகிப்து கல்வெட்டு
எகிப்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளதென்பது பலருக்கும் தெரிந்த விடயம். அதில் மன்னர்களின் பழமையான கல்வெட்டு பகுதியில் 2000 ம் ஆண்டு பழமையான தமிழ், பிராமி கல்வெட்டுகளை சுவிசர்லாந்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட அ்ந்த கல்வெட்டு ”சிகை கொற்றன்” என்ற தமிழ் வணிகரைக் குறிக்கின்றன என கூறப்படுகின்றது. இந்தியாவை சேர்ந்த வணிகர்கள் தங்களுடைய வர்த்தகத்தை தொடங்க எகிப்திலும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது.

இந்த சிகை கொற்றன் எனப்படும் பெயர் பண்டைய தமிழகத்தின் சங்க இலக்கியத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகை கொற்றன் எனப்படும் பெயர் பல கல்லறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டுபிடித்தவர் சுவிஸ் அறிஞர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் சார்லோட் ஷ்மிட் ஆவார். இதன்படி ஒரு தமிழ் வணிகர் எகிப்தின் மன்னகளின் கல்லறைகளின் பல இடங்களில் இந்த பெயர் பொறிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

தமிழில், 'சிகை' என்பது கிரீடம் அல்லது குடுமியை குறிக்கும். சில கல்வெட்டில் 'சிகை கொற்றன் வர கண்ட்' என்று எழுதப்பட்டுள்ளது. அதற்கான அர்தம் அவர் வந்தார் அவர் பார்த்தார் என்று அர்த்தம்.
மன்னர்களின் பள்ளதாக்கு பகுதியில் இருந்த 30 கல்வெட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
இவற்றில் 20 கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. இது தமிழர்கள் எகிப்திலும் வர்த்தகம் செய்ததற்கான சான்றாக பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |