கடல் நீர் ஏன் உப்பாக இருக்குன்னு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவரும் கடலுக்கு சென்றிருப்போம் கடலில் குளித்திருப்போம் ஆனால் கடல் நீர் ஏன் உப்பாக இருக்கின்றது இதற்கு என்ன காரணம்? இது குறித்து நம்மில் பலரும் சிந்தித்திருக்க மாட்டோம்.
மழை பொழிவதனால் தான் தண்ணீர் பூமிக்கு வருகின்றது ஆனால் மழை நீரில் உப்பு இல்லாத போது கடல் நீர் எப்படி உப்பு சுவையுடன் இருக்கின்றது இந்த குழப்பத்திற்கான தீர்வை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆறுகள் வழியாக...
கடலின் உப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாக காணப்படுவது மழை நீர் தான் அதுவும் அதில் இருக்ககூடிய கனிம அயன்களின் சேர்க்கையே இதற்கு காரணமாக அமைகின்றது.
காற்றில் உள்ள கார்பன்டைஆக்சைடு மழைநீரில் கரைந்து மழைநீரை சிறிதளவு அமிலமாக மாற்றுகிறது. அப்படி அமிலமாக மாறிய மழை தரையை அடையும் போாது பாறைகளை அரிக்கிறது, பொதுவாகவே பாறைகளில் சோடியம் அதிகமாக காணப்படும் இப்படி அரிக்கபட்ட துகள்கள் கனிம உப்புகளை வெளியிடுகிறது.
அது மழை நீருடன் கலந்து ஆறுகள் வழியாக கடலில் கலக்கும். 90% சதவீதம் சோடியம் மற்றும் குளோரைடு இந்த அயனிகளில் அதிகமாக காணப்படுகிறது.
வாகனம் வாங்கிய உடன் டயருக்கு அடியில் எலுமிச்சை வைத்து ஆரம்பிப்பவரா நீங்க? அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இவ்வாறு அலப்பரிய பதார்த்தங்களை கரைத்துக் கொண்டு வந்த மழை நீர் ஆறுகளின் வழாயாக கொண்டு செல்லப்பட்டு இறுதியாக கடலில் சேர்கின்றது. இவ்வாறு கடலை அடைந்த சோடியம் நிறைந்து காணப்படும் நீர் . சூரியனின் வெப்பத்தால் ஆவியாக்கபடுகிறது இதன் காரணமாக நீரனாது ஆவியாகி மேலே சென்றுவிடும் ஆனால் உப்பானது கடலிலேயே தங்கிவிடுகின்றது.
இதன்காரணமாக கூடுதல் உப்பு கடலில் சேர்கிறது அதாவது உப்புநீர் ஆவியாகி நீர் மேலே சென்றுவடும் மீதமுள்ள உப்பு கடலிலேயே தங்கிவிடும் இவ்வாறு பல கோடி வருடங்கள் இந்த செயல் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தமையே கடல் நீர் உப்பாக காணப்படுவதற்கு காரணமாகும்.
மாக்மா(LAVA)குழம்புகள்
மேலும் எரிமலைகள் வெடிக்கும்பொழுது கடற்பரப்பில் விரிசல் ஏற்பட்டு பூமியின் மையத்திலிருந்து மாக்மா(LAVA) குழம்புகள் வெளிப்படுகிறது. இந்த வெப்பம் தொடர்ச்சியான இரசாயன எதிர்வினைகளை கடற்பரப்பில் ஏற்படுத்துகிறது.
பிறகு நீரானது ஆக்சிசன், மெக்னீசியம் மற்றும் சல்பேட்டுகளை இழந்து, சுற்றியுள்ள பாறைகளிலிருந்து இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களை உருவாக்குகிறது. இந்த நிகழ்வின் காரணமாகவும் கடல் நீர் உப்பாக காணப்படுகிறது.
ஆறுகளில் உள்ள நீர் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதனால் ஆறுகளில் இந்த செயற்பாடு இடம்பெறுவதில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |