விஜய் நெற்றியில் கருப்பு பொட்டு வைக்க இது தான் காரணமா? இது தெரியாம போச்சே!
முதல்வர் விஜய் நெற்றியில் வைத்திருக்கும் கருப்பு பொட்டு குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் விஜய்
தமிழ் திரைத்துறை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். இவர் நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக மாறி உள்ளார்.
இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சி தனிக்ட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் விஜய் முதலமைச்சராக மாறி உள்ளார். விஜய் பதவியேற்க வந்ததில் இருந்து தற்போது சட்டசபைக்கு வருவது முதல் அவருடைய கருப்பு கோட் சூட் மற்றும் அவர் நெற்றியில் வைத்துள்ள கருப்பு பொட்டு பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய்யின் கருப்பு பொட்டு இரகசியம்
விஜய் முதல்வராக பதவி ஏற்ற பின் அவர் நெற்றியில் கருப்பு பொட்டு ஒன்று காணப்படுகின்றது. அந்த பொட்டு வெறும் பொட்டு மட்டுமல்ல அதன் பின்னால் ஒரு இரகசியம் உள்ளது.
அரகஜா - இந்த பொட்டு அரகஜா திலகம் எனப்படுகின்றது. அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் இந்த பொட்டை அதிகமாக வைப்பார்கள்.
இந்த அரகஜா திலகம் ஜவ்வாது,பச்சை கற்பூரம், புனுகு, வெட்டிவேர் ஆகிய மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டது.

இந்த அரகஜா திலகத்தை ஆன்மிகம் மற்றும் ஜாதகத்தை அதிகளவு நம்புபவர்கள் இந்த பொட்டை பயன்படுத்துகிறார்கள். இதை வைத்தால் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள், வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடர் அளிக்க அறிவுரையின் பேரில் இந்த பொட்டு வைக்கும் வழக்கத்தை விஜய் பின்பற்றுகிறார். இதில் முக்கியமானது விஜய் தேர்தலுக்கு முன்பும் வைத்திருந்தார் தற்போது வெற்றிக்கு பின்னும் பின்பற்றுகிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |