அனிருத்திற்கு வெளிநாட்டில் திருமணம்! பொண்னு யார் தெரியுமா?
முன்னணி இசையமைப்பாளரான அனிருத்திற்கு திருமணம் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

அனிருத்
தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் இசையமைப்பார் அனிருத்தும், ஐபிஎல் தொடரில் விளையாடும் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனும் காதலித்து வருகிறார்கள் என்ற செய்தி வந்தது.
இதனை தொடர்ந்து அனிருத்திற்கு வெளிநாட்டில் திருமணம் என தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் இசையில் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று படங்கள் வெளியானாலும் அவை அனைத்தும் இசைக்காக பெருமளவு பாராட்டப்படுகிறது.

அனிருத்திற்கும் காவ்யா மாறனுக்கும் திருமணம் என முன்னர் வெளியாகிய செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக, கல்யாணமா? லொள்ளு, சில்லா இருங்க மக்களே, வதந்திகளைப் பரப்பாதீங்க" (“Marriage ah? lol.. Chill out guys. Please stop spreading rumours”)என்று பதிவிட்டிருந்தார்.
இதன் பின்னர் திருமணம் பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது அனிருத் மற்றும் காமவ்யா மாறனுக்கு வெளிநாட்டில் திருமணம் எனப்படுகின்றது.

வெளிநாட்டில் திருமணம்
அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்து குறித்து இரு வீட்டாரும் பேசி தேதி குறித்து விட்டதாகவும், இந்த ஆண்டில் வரும் நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும், அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும் திருமணத்தை இந்தியாவில் வைக்காமல் ஸ்பெயினில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் என்று தற்போது ஒரு தகவல் இணையத்தில் உலா வருகின்றது.
ஆனால் மிக முக்கியமான விடயம் இது தொடர்பான எந்தவித அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |