இன்றுமுதல் நவக்கிரக மாற்றம் ஆரம்பம்! கோடியில் புரளப்போகும் ராசிகள் யார்?
இன்று முதல் நவகிரகங்களின் அதிரடி மாற்றம் ஆரம்பமாகிறது. இதனால் வாழ்க்கையில் பல மாற்றங்களை சில ராசிகள் சந்திக்கப்போகின்றது.

நவக்கிரக மாற்றம்
ஜோதிடத்தில் கிரக நிலைகளில் குரு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
ஜோதிடத்தில் இந்த சேர்க்கை குரு-மங்கள யோகம் என்று அழைக்கப்படுகிறது.
குருவின் தெய்வீக அருளும், செவ்வாயின் வீரியமும் இணைவதால் பல ராசிகளுக்கு இது தாக்கத்தை உண்டாக்கும் எனப்படுகின்றது.

அறிவிற்குக் காரகனான புதனும், சுகபோகங்களுக்குக் காரகனான சுக்கிரனும் சுப வீடுகளில் இணையும் போது அது லக்ஷ்மி நாராயண யோகத்தை உண்டாக்கும்.
இந்த சேர்க்கை குறிப்பிட்ட சிலரது ராசிகளுக்கு பல நன்மைகளை கொட்டி கொடுக்கும்.
முக்கியமாக கலைத்துறை, ஊடகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகளும், பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும்.
விரிவான பலன்களை ராசிகளை தனித்தனியாக பிரித்து முழு பொது பலனையும் பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசி நேயர்களுக்கு இன்று முதல் தொட்டதெல்லாம் துலங்கும்.
- நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் மிக எளிதாக முடிவடையும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- சேமிப்புகள் உயரும்.
- குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
சிம்மம்
- சிம்ம ராசிக்கு இந்த கிரக சேர்க்கையானது பெரும் நிம்மதியையும், வெற்றியையும் கொடுக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
- பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்திராத லாபம் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
- சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.
விருச்சிகம்
- விருச்சிகத்திற்கு இன்று முதல் நல்ல காலம் ஆரம்பமாகிறது.
- பொருளாதார ரீதியாக நீங்கள் பெரிய உயரத்தை எட்டுவீர்கள்.
- புதிய தொழில் தொடங்கலாம்.
- கடன் பிரச்சனைகள் முடியும்.
- கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
- உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
கும்பம்
- கும்ப ராசிக்கு தடைகளும், சோதனைகளும் விலகும்.
- முயற்சி வெற்றியை நோக்கிச் செல்லும்.
- புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.
- வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான செய்தி வரும்.
- உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகை மாறி, சுமுகமான உறவு ஏற்படும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).