காதலர்களில் ஒருவர் புத்திசாலிகளாக இருந்தால் “இந்த” பிரச்சினை வருமாம்.. உஷாராக இருங்க
“காதல்” என்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சியாக பார்க்கப்படுகிறது. காதலில் எப்போதும் லாஜிக் இருக்கவே கூடாது. மாறாக மேஜிக் மட்டும் தான் நிலைத்திருக்க வேண்டும் என பலரும் கூறுவார்கள்.
இதன்படி, காதலர்களில் ஒருவர் புத்திசாலியாக இருந்தால் அந்த காதலில் ஏதாவது பிரச்சினை இருந்துக் கொண்டே தான் இருக்கும். காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம் என பொன்மொழியும் உள்ளது.
புத்திசாலித்தனம் ஒரு சிறப்பான குணமாகக் கருதப்பட்டாலும், அது சில நேரங்களில் காதல் விஷயங்களில் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தும். விமர்சன சிந்தனை, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவர்கள் மற்றும் தொழில்முறை வெற்றி உள்ளிட்ட காரணங்களால் கூட ஒருவர் உங்கள் மீது காதல் வயப்படலாம்.
இந்த உறவில் அதிகமான பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையின் பல அம்சங்களில் புத்திசாலித்தனம் தெளிவைக் கொண்டுவரும் அதே வேளையில், காதல் கண்மூடித்தனமான அன்பு, முன்னேற்பாடுகள் இல்லாத ஆச்சரியங்கள் போன்றவற்றை எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், புத்திசாலிகள் காதல் உறவில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
காதலில் வரும் பிரச்சினைகள்
1. அதிக புத்திசாலிகளாக இருப்பவர்கள் எந்தவொரு விடயம் செய்தாலும் அதனை ஆராய்ந்து அதனால் ஏதாவது விளைவுகள் வருமா? என்பதனை பல தடவைகள் சிந்தித்த பின்னர் தான் அந்த வேலையை செய்வார்கள். இப்படி செய்யும் பொழுது உறவில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்படும். அதே போன்று சுய சந்தேகங்களை ஏற்படுத்தும்.
2. புத்திசாலிகள் பெரும்பாலும் தங்களின் நண்பர்களை உயர்ந்த நிலையில் நிர்ணயிப்பார்கள். ஒரு உறவில் ஆழ்ந்த அறிவுசார் உரையாடல், மெச்சூரிட்டி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். இதனால் காதல் உறவில் பிரச்சினையை ஏற்படுத்தும்.
3. அனைத்து விஷயத்தையும் லாஜிக்காக சிந்திப்பார்கள். பெரும்பாலும் உணர்வுரீதியான பிணைப்புக்காக போராடும் குணம் இருப்பதால் உணர்வுகளை விட பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அவர்களின் காதலன்/காதலி உணர்வுரீதியான இணைவது கடினம். இந்த பற்றற்ற தன்மை நெருக்கமின்மையை ஏற்படுத்தும்.
4. புத்திசாலித்தனமான நபர்கள் காதலில் முழுமையாக ஈடுபடுவதை விட கடுமையாக சிந்திப்பார்கள். உணர்ச்சி சார்ந்திருத்தல், தனித்துவத்தின் இழப்பு அல்லது தோல்விக்கான வாய்ப்பு எல்லாவற்றையும் முன்னரே சிந்தித்து அதன்படி செயற்படுவார்கள். இதனால் தான் தீவிர உறவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னர் யோசிப்பார்கள்.
5. அறிவுசார் இணக்கத்தன்மை கிடைப்பது அரிதாக இருப்பதால் புத்திசாலி நபர்கள் பெரும்பாலும் ஆழமான உரையாடல்கள், தத்துவ விவாதங்கள் மற்றும் அர்த்தமுள்ள பரிமாற்றங்கள் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அறிவுத்திறன் மற்றும் ஆர்வத்தின் நிலைக்கு ஏற்ற ஒரு துணையைக் கண்டுபிடிப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கும். இவர்களின் காதல் துணையை கண்டறிவது மற்றும் அவர்களை பராமரிப்பது கடினம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |