மாதவிடாய் கால பழமையான கட்டுப்பாடுகள்: பின்னணியில் உள்ள அறிவியல் பற்றி தெரியுமா?
முன்னைய காலங்களில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு செல்ல கூடாது, சமையலறையில் எந்த பொருட்களையும் தொடக்கூடாது, தனியறையில் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இவ்வாறான கட்டுப்பாடுகளை பெரும்பாலான பெண்கள் இன்றுவரையில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளாகவே பார்க்கின்றார்கள்.
ஆனால் நமது முன்னோர்கள் பின்பற்றிய பல நடைமுறைகள் மற்றும் விதித்த கட்டுப்பாடுளுக்கு பின்னால் துல்லியமான அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.
இவற்றை முழுமையாக தெரிந்துக்கொள்ளாத காரணத்தால் இன்றைய காலத்து பெண்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
இவ்வாறு நமது முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதித்த கட்டுபாடுகளுக்கு என்ன காரணம் என்பதை விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கட்டுப்பாடுகள்- காரணங்கள்
மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் மிகவும் உஷ்ணமாக இருக்கும் எனவே சமையல் பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை தொட்டால் இது விரைவில் பழுதடையும் என்பதால் சமையலறை பொருட்களை தொடக்கூடாது என சொல்லி வைத்ததார்கள்.
மாதவிடாய் காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். என்பதால் யாருடனும் நெருக்கமாக இருக்காமல் தனி அறையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைக்காகவே இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
அறிவியல் ரீதியாக பார்த்தோமேயானால், இந்த மாதவிடாய் நாட்களில் நமது உடலில் உள்ள சக்கரங்கள் கீழ் நோக்கி செயல்படும். அதனால் புவி ஈர்ப்புவிசையின் காரணமான அதிக குருதி போக்கு ஏற்படும் என்பதற்காக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என குறிப்பிடப்பட்டது.
மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவிதமான மாற்றங்களை சந்திக்கின்றார்கள்.இந்த நேரத்தில் பெண்களுக்கு ஓய்வு மிகவும் முக்கியமானது என்பதற்காகவே இவ்வாறு தனி அறையில் ஓய்வெடுக்க வேண்டும் என கட்டுபாடுகளை விதித்தார்கள். இதுவும் ஒரு முக்கியமான அறிவியல் காரணமாகும்.
அதனால் இந்த விஷயத்தை நாம் மரபு ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பார்க்க வேண்டுமே தவிர பெண்ணை அடிமைபடுத்துதல், ஒதுக்குதல், ஆண் ஆதிக்கம் என்று நினைக்க க்கூடாது.
இவ்வாறு நினைப்பதால் இன்றைய கால பெண்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |