வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத அறிவியல் பின்னணி
பொதுவாகவே புதிய வீடு கட்டினாலும் புதிய தொழில் ஆரம்பித்தாலும் நிச்சயம் அந்த இடத்தில் நிச்சயம் திருஷ்டி பூசணிக்காய் இடம்பெற்றுவிடும்.
இன்று நவீன உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், தொழில் நுட்ப நிறுவனங்கள் தொடக்கம் நவீன மால் வரை அனைத்து கட்டுமானங்களிலும் இந்த திருஷ்டி பூசணிக்காய் எப்படியாவது இடம் பிடித்துவிடுவது ஏன் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
தொன்று தொட்டு தீய சக்திகள் மற்றும் தீய பார்வை மீதான நம்பிக்கை இருந்து வருகின்றது. தீய சக்திகள் என்பது வெறுமனே மூட நம்பிக்கை என்று புறக்கணித்துவிட முடியாது.
உண்மையில் இதில் அறிவியல் சார்ந்த உண்மைகளும் இருக்கத்தான் செய்கின்றது. நம்மிடம் யாராவது எதிர்மறையாக பேசினாலே அதன் தாக்கம் நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்களை நம்மால் நன்கு உணர முடியும்.
அப்படி இருக்கையில் தீய எண்ணங்களுடனான பார்வை, எதிர்மறையான பேச்சு மற்றும் ஆற்றல் ஒன்றினையும் போது அதனை தீய சக்தி என்கின்றோம். இந்த எதிர்மறை சக்திகளுக்கு முன்னேற்றத்தை தடுக்கும் ஆற்றல் காணப்படுகின்றது.
அதனை நீக்குவதற்கு ஏன் வெள்ளை பூசணிக்காயை பயன்படுத்துகின்றார்கள் என்பது குறித்து அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பூசணிக்காய் கட்டுவது ஏன்?
இயற்கையாகவே குறிப்பிட்ட சில பொருட்களுக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் மிகவும் நேர்மறை ஆற்றல் கொண்டதாக அறியப்படுகின்றது.
உணவுகளில் மிகவும் அதிக பிராண (உயிர்சக்தி) சக்தி கொண்ட சில உணவுகள் காணப்படுகின்றது அந்த பட்டியலில் வெள்ளை பூசணிக்காய் முதலிடம் வகிக்கின்றது.
பூசணியின் இந்த நேர்மறை ஆற்றலை அறிவியல் கண்னோட்டத்தில் நமது முன்னோர்கள் பார்த்ததன் விளைவாகவே இதனை வீட்டின் முன்பு கட்டும் பழக்கம் நம்மிடையே உருவாக்கப்பட்டது.
பூசணைக்கு தீய ஆற்றலை உள்வாங்கி நல்ல ஆற்றலை வெளியிடும் தன்மை அறிவியல் ரீ்தியில் அதிகம் காணப்படுகின்றது. மேலும் இந்த காய் எளிதில் பழுதடைவது கிடையாது என்பதனாலும் இதனை திருஷ்டிக்காக பயன்படுத்தினார்கள்.
வீட்டை சுற்றியுள்ள தீய அதிர்வுகளை வீட்டின் உள்ள மனிதர்களுக்கு கடத்தாமல் தனக்குள் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை இந்த வெள்ளை பூசணிக்காயில் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |