வணக்கம் சொல்வது ஏன்? அதன் பின்னணியில் இப்படியொரு அறிவியல் காரணமா!
பொதுவாகவே தமிழர்கள் தொன்று தொட்டு பின்பற்றிவரும் பலவிடயங்களுக்கு பின்னால் துல்லியமான அறிவியல் காரணமும் காணப்படுகின்றது.
நமது முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் வெறுமனே சாஸ்திரங்களின் அடிப்படையிலோ அல்லது அலங்காரத்துக்காகவோ மட்டும் பின்பற்றப்பட்டவை கிடையாது என்பதே நிதர்சனம்.
அந்த வகையில் தழிழர் பண்பாட்டில் மிகவும் முக்கியமான அம்சங்களுள் ஒன்றாக வணக்கம் சொல்வது பார்க்கப்படுகின்றது. இது வெறுமனே ஒரு கலாசார நடைமுறை என்று தான் பலரும் நினைப்பார்கள்.
ஆனால் அதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. அது குறித்து முழுமையாக தெரியாததன் காரணமாகத்ததான் வணக்கம் என்பதைச் சிலர் ஆங்கிலத்தில் “குட் மோர்னிங்”என சொல்லிச்செல்கின்றார்கள்.
வணக்கம் சொல்வதன் உண்மையான அர்த்தம் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வணக்கத்தின் உண்மையான அர்த்தம்
“குட் மோர்னிங்” என்றால் நல்ல காலைப்பொழுதாகட்டும் என்று தான் அர்த்தம் இதற்கு காலை வணக்கம் என்று பொருள் கொள்ளப்படுகின்றது.
ஆனால் வணக்கம் என்பதற்கு உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணக்குகின்றேன் என்பதே அர்த்தம்.
அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவனின் மூலம் இருக்கின்றது என்பது தான் உண்மை அதை தான் உயிர் அல்லது ஆன்மா என்கின்றோம்.
ஒருவரைப் பார்த்து வணக்கம் என்று கூறும்போது அவர் முகத்துக்கு மட்டுமல்லாமல் அவர் உயிரில் மூலமாக இயங்கும் இறைவனை வணங்குவதாக கருதியே வணக்கம் சொல்லப்படுகின்றது.
வணக்கம் என்பது ஒரு வழிபாட்டிற்குச் சமம் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன் காரணமாகத்தான் வணக்கம் கூறுகின்றபோது காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று நாம் கூறுவதில்லை.
அப்படிக் கூறுவது மேற்கத்தேய கலாசாரத்தின் சாயலில் உருவெடுத்த பிழையான முறைமையாகும்.
அறிவியல் காரணம்
வணக்கம் சொல்லும் போது நமது இரண்டு கைகளையும் கூப்பிக்கூற வேண்டும் என்பதை நம் முன்னோர் வலியுறுத்தியுள்ளனர்.
அதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்னவென்றால் நமக்குத் தலையில் இடது பக்க மூளை வலது பக்க மூளை என இரண்டு பாகங்களாக தான் மூளை தொழிற்படுகின்றது.
நாம் நம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் போது நம் உடல் முழுக்க ஆற்றல் செயல்பட்டு, நமது இடது பக்க மூளையும் வலது பக்க மூளையும் முழு விழிப்பு நிலையினை அடைந்து, நாம் முழு விழிப்பு நிலையில் இருப்போம்.
அதன் போது இயற்கையாகவே சிந்தனை தெளிப்பெருகின்றது. புத்துணர்வு கிடைக்கின்றது. அதன் காரணமாகத்தான் வணக்கம் சொல்லும் முறை பின்பற்றப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |