நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள்
இன்றைய இளம் தலைமுறையினர் சிலர் நெற்றியில் விபூதி வைப்பதை மூடநம்பிக்கையாக கருதுகிறார்கள்.
பெற்றோர் வற்புறுத்தல் பேரில் இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் கண்ணுக்கே தெரியாமல் சிறிதாக விபூதி வைத்துக்கொண்டு வெளியில் சென்றதும் அதனை அழித்துவிடுகின்றார்ககள்.
தற்காலத்தில் விபூதி வைப்பது தங்களின் ட்ரெண்டிங் ஆடைகளுக்கு பொருத்தமற்றது என்ற ஒரு கருத்து இளைஞர்கள் மத்தியில் உருவாகிவிட்டது.
ஆனால் உண்மையில் விபூதியை நெற்றியில் அணிவதன் பின்னணியில் நிறைய ஆன்மிக மற்றும் அறிவியல் நன்மைகளும், காரணங்களும் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?
பொதுவாகவே நமது முன்னோர்கள் சொல்லி வைத்த அனைத்து விடங்களுக்கு பின்னாலும் பல்வேறு நன்மைகளும் துள்ளியமான அறிவியல் காரணங்களும் இருக்கும்.
அப்படி நமது முன்னோர்கள் பின்பற்றிய பல்வேறு நடைமுறைகள் அறிவியலுடன் தொடர்புப்படுவதை தற்காலத்தில் விஞ்ஞானிகளும் கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.
நெற்றியில் விபூதி வைப்பதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் அறிவியல் காரணங்கள் தொடர்பிலும் விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
விபூதியை பூசுவதன் நன்மைகள்
நெற்றியில் விபூதியை வைப்பதால் எதிர்மறை ஆற்றல் உடலில் செல்வது தடுக்கப்படுவதாக புராண இதிகாசங்களிலும் இந்து சாஸ்திரத்திலும் குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் ரீதியாக மூன்றாவது கண் என்பது ஆழ் மனம் என்று கூறப்படுகின்றது. நெற்றியின் மையப்பகுதியில் விபூதி வைப்பதால் அதன் ஆற்றல் அதிகரிக்கப்படும் என்பது நம்பிக்கை.
மேலும் இயற்கையிலேயே குறிப்பிட்ட சில பொருட்களுக்கு நேர்மறை ஆற்றல்ககளை ஈர்க்கும் சக்தி காணப்படுகின்றது.
அந்த வகையில் விபூதி வைப்பதால் அறிவியல் ரீதியாக உடலில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கின்றது.
அதனால் மன அழுத்தம் குறைவடையும். நெற்றியில் விபூதி வைப்பதால் தலையில் தங்கியுள்ள அதிகப்படியாக தண்ணீரை அது உறிஞ்சிவிடுகின்றது. அதனால் சளி இருமல் போன்ற உடல் உவாதைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
அதுமட்டுமன்றி விபூதி வைப்பதால் கிருமி தொற்றுகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.விபூதி மாட்டு சானத்தில் இருந்தே தயாரிக்கப்டுகின்றது.
மாட்டு சானம் ஒரு இயற்கை கிருமிநாசினியாக செயல்படுகின்றது. நெற்றி, கை, மார்பின் மேல் பகுதியில் விபூதியை தடவினால் சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
விபூதியால் உடல் முழுவதும் பூசுவதால் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற முடியும். இயற்கையாகவே நமது உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தை தூண்டி அனைத்து ஆற்றல் சக்கரங்களையும் நேர்மறையாகச் செயல்பட வைப்பதில் விபூதி பெரும் பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |