வீட்டின் முன் கோலம் ஏன் போட வேண்டும்? மறைக்கப்பட்ட காரணங்கள்
இந்தியா- தமிழ்நாடு எனக் கூறும் பொழுது நமது ஞாபகத்திற்கு வருவது அங்குள்ள கலாச்சார அம்சங்கள் தான்.
அதே போன்று தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், துடிப்பான பண்டிகைகள் மற்றும் வளமான கலாச்சார மரபுகள் காணப்படும். அதில் ஒன்று தான் தினமும் வீட்டு வாசலில் ஒரு அழகான கோலம் போடுதல்.
இப்படி வீட்டு வாசலில் போடப்படும் அழகான கோலம் பல நூற்றாண்டுகளாக பயிற்சி செய்து வந்த கலையம்சமாகும்.
கோலம் போடுவது அவ்வளவு பெரிய கஷ்டமா? என பலரும் கேட்கலாம். ஆனால் சாதாரணமாக எல்லோராலும் கோலம் போட முடியாது. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே பல அழகான கோலங்களை உருவாக்குகிறார்கள்.
இந்த கோலம் வீட்டின் வாசலுக்கு ஒரு அழகான தோற்றத்தைக் கொடுப்பதைத் தவிர, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக கலை தினம் ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் பல்வேறு கலாச்சரங்களுக்கு முக்கியம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், கலையம்சத்தில் இன்றும் மறையாமல் இருக்கும் கோலக்கலை பற்றிய ரகசியங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கோலக்கலை பற்றிய ரகசியங்கள்
1. கோலம் என்பது ஒரு பழைய கலை வடிவமாக பார்க்கப்படுகிறது. ஓவியக்கலையின் அடிப்படைகள் இங்கு கற்பிக்கப்படும். தமிழர்கள் தினமும் செய்யக்கூடிய இந்த கலையை வீட்டிற்கு முன் போடும் பொழுது லட்சுமி தேவியின் வரவேற்பு கிடைக்கும். ஏனெனின் இது லட்சுமி தேவியின் அடையாளமாக உள்ளது.
2. வழக்கமான நாட்களில் கோலம் போடுவதற்கு 10 நிமிடங்கள் வரை எடுக்கும். அதே சமயம், பண்டிகை நாட்களில் 2 மணிநேரம் கூட ஆகலாம்.
3. சாதாரண கோலப் பொடியானது அரிசி மாவுடன், வெள்ளைக் கல் பொடி சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் கோலம் போடும் பொழுது அழகாக இருக்கும். கோலப் பொடி மென்மையாக இருந்தால் மாத்திரமே வரையும் பொழுது இலகுவாக வடிவங்கள் வரும். கோலம் போட்ட பின், அந்த கோலத்தை மெருகேற்ற வெவ்வேறு வண்ணப் பொடிகளையும் பயன்படுத்தலாம்.
4. கோலத்தில் புள்ளிக் கோலம் மற்றும் ரங்கோலி என இரண்டு வகைகள் உள்ளன. புள்ளிகள் வைத்தும் கோலம் போடலாம். அதே சமயம், நமது விருப்பத்திற்கமைய ஓவியத்தையும் வரையலாம். மாறாக கோலம் போடும் பொழுது பொறுமை அவசியம்.
5. கோலங்களில் கம்பி கோலம், ஊடுப்புள்ளி கோலம், படி கோலம் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. அதில், கம்பி மற்றும் ஊடுப்புள்ளி கோலம் புள்ளிகளால் மட்டுமே வரையப்படுகிறது. இந்த வகை கோலத்தில் புள்ளிகளை இணைக்கக் கூடாது. மாறாக ஒரு புள்ளியில் தொடங்கி புள்ளிகளைத் தொடாமல் கோடுகளை வரைந்து தொடங்கிய இடத்திற்கு ஒரே ஓட்டத்தில் திரும்பி வர வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |