உங்களின் ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?

1. மண்டையோடு
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்க்கும் பொழுது மண்டையோடு இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் ஆற்றல்மிக்க நபராகவும் எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடிய நபராகவும் இருப்பீர்கள்.
- சாகசங்களை அதிகம் விரும்பக்கூடிய நபர்களாக இருப்பீர்கள்.
- எப்போதும் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பீர்கள்.
- உங்களின் துடிப்பான ஆளுமை ஒவ்வொரு நாளும் புது அனுபவத்தை தரும். எந்தவொரு இடத்திற்கு சென்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவீர்கள்.
- மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்கும் உங்களிடம் எப்போதும் சந்தோஷத்தை உணரலாம்.
- உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் குணம் உங்களிடம் இருக்கும்.
2. இயற்கை காட்சிகள்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது இயற்கை காட்சிகள் தெரிவது போன்று உணர்ந்தால் நீங்கள் எந்தவொரு செயலையும் நன்கு திட்டமிட்டு செய்வீர்கள். எப்போதும் தெளிவான சிந்தனையுடன் இருக்கும் நபராக இருப்பீர்கள்.
- வாழ்க்கையை சிறப்பாக மற்றும் முறையாக அணுக விரும்புவீர்கள். இந்த குணம் உங்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் மன அமைதியையும் கொண்டு வரும்.
- தினசரி வேலைகள் முதல் நீண்ட கால இலக்குகள் வரை ஒவ்வொரு விவரத்தையும் திட்டமிடுவது உங்களின் இரண்டாவது இயல்பாக இருக்கும்.
- சவால்களை திறம்பட நிர்வகிக்கும் திறன் இருக்கும் நீங்கள் அரிதாகவே சோர்வடைவீர்கள்.
- இப்படியான குணத்தால், பணியிடத்தில் நீங்கள் நம்பகமான நபராக மாறுவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        