எச்சரிக்கை! அழுக்கான காலுறைகளை அடிக்கடி பாவித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
By Nivetha
மேலைநாடுகளில் ஷூ என்பது குளிர்காலத்தை மனிதர்கள் தாங்கிக்கொள்வதற்காக கண்டுப்பிடிக்கப்பட்டது.
வெறும் கால்களில் ஷீ அணிய முடியாது என்பதால், அதற்காக காலுறைகள் தயாரிக்கப்பட்டன.
அப்போது தான் கால்களும் பாதுகாப்பாக இருக்கும், வெளிப்புற தொடர்புகள் கால்களை பாதிக்காமல் இருக்கும்.

ஷூவை போன்றே, காலுறைகளையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சாக்ஸ் அணிவதால் பாதங்களின் சருமதுக்கு அது பாதுகாப்பாக இருக்கின்றன.
அதனால் எப்போது சாக்ஸுகளை நாம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இன்று அழுக்கான காலுறைகளில் மறைந்திருக்கும் ஆபத்து குறித்து பார்க்கலாம்.

அழுக்கான காலுறைகளில் இவ்வளவு ஆபத்தா?
- அதை தொடர்ந்து துவைக்காமல் போட்டு வந்தால், ஈரம் காரணமாக காலுறைக்குள் பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் பெருகும்.
- இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கால் சருமத்தில் ஒவ்வாமை, அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிடவை உருவாகும்.
- ஒருவேளை கொப்பளங்கள் உடைந்து ரத்தம் வந்தால், பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் அந்த புண் வழியாக உடலுக்குள் பரவும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கால்களை இறுக்கமாக அணியக்கூடாது.
- அது ரத்தவோட்டத்தை பாதிக்கும்.
- அதேபோன்று குழந்தைகள், சிறார்கள், பள்ளி மாணவர்கள் அணியும் காலுறைகளை அவ்வப்போது துவைத்து விடுவது நல்லது. காரணம், அவர்களில் பலரும் மண்களில் விளையாடுவார்கள்.
- மண் ஷூ வழியாக கால்களில் சென்றுவிடும். இது பாதங்களில் சிராய்ப்பு மற்றும் கொப்பளங்களை ஏற்படுத்தும்.
- நாம் அணியும் அழுக்கு சாக்ஸ் வழியாக வெரூகா பிளாண்டாரிஸ் என்கிற வைரஸ் பரவும்.
- ஒருவேளை விழுப்புண், வெட்டுக்காயம் போன்றவை உங்கள் பாதங்கள் இருந்தால், குறிப்பிட்ட இந்த பாக்டீரியா உடலுக்குள் புகுந்து பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு காலுறைகளை நாம் அணிந்திட வேண்டும். மிகவும் கனமான காலுறைகள் அணிவது தவறு.
- இதன்காரணமாகவும் உங்களுடைய கால்களில் புண் உருவாகும்.
- மேலும் வியர்வை சுரப்பிகள் பாதிக்கக்கூடும். மிருதுவான பருத்தியினாலான காலுறைகள் அணிவது நல்லது.
- அதேபோன்று சாக்ஸுடன் வீட்டுக்குள் உலா வருவது, மணலில் நடப்பது போன்றவற்றை செய்யாதீர்கள். உங்களுடைய குழந்தைகளையும் இதுபோன்று செய்வதற்கு அனுமதிக்காதீங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US