உயிராபத்தை ஏற்படுத்துமா? மரவள்ளி கிழங்குடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க...
பொதுவாகவே தொன்றுதொட்டு மரவள்ளி கிழங்குடன் இஞ்சி கலந்த உணவுகளை உட்கொள்வது உயிராபத்தை ஏற்படும் என கூறப்பட்டு வருகின்றது.
அறிவியல் வளர்சியற்ற காலத்திலேயே நமது முன்னோர்கள் இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து உண்ணக்கூடாது என சொல்லிவைத்திருக்கின்றார்கள்.
இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது ? இதன் பின்னால் காணப்படும் அறிவியல் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவு நஞ்சாகும் வாய்ப்புகள்
மரவள்ளிக்கிழங்கின் தோலின் உட்புற எல்லையில் ”சயனோ ஜெனரிக் குளுக்கோ சயிட் லீனமெரின்” எனும் வேதிப்பெருட்கள் அடங்கியுள்ளது.
மரவள்ளி கிழங்கின் வெளிப்புற தோல் காயப்பட்டாலோ அல்லது கிழங்கை அகழ்ந்தெடுத்த பின் இரண்டு நாள்களுக்கு மேல் சேமித்து வைத்தாலோ குறித்த வேதிப்பொருட்கள் ”ஹைரோ சயனிக் அமிலம்” என்னும் நஞ்சாக மாறி விடுகின்றது.
மரவெள்ளிக் கிழங்குடன் இஞ்சி அல்லது சுக்கு(வேர்க்கம்பு) சேர்த்து சமைக்கவோ இஞ்சி சேர்ந்த உணவை கூட்டாக சேர்த்து உண்ணவோ கூடாது.
இரண்டிலும் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின் கலப்படத்தால் உணவு நஞ்சாகும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
இஞ்சியில் காணப்படும் "சயனோ ஜெனிற்றிக் குளுக்கோசேட்" எனும் வேதிப்பொருள் மரவள்ளிக் கிழங்கிலுள்ள சயனோ "ஜெனற்றிக் குளுக்கோசைட்" என்னும் காபோவைதரேற்றான மாப்பொருளுடன் தாக்கமடைந்து "ஐதரசன் சயனைட்" எனும் நஞ்சை வெளிவிடுகிறது என்று அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
மரவள்ளி கிழங்குகளில் காணப்படும் 'சயனோசெனிக் குளுக்கோசைட்டு' எனப்படும் நச்சுப் பொருள் காணப்படும் அளவைப் பொறுத்து "இனிப்பு மரவள்ளி, "கசப்பு மரவள்ளி" என இரு வகையாக பிரிக்கப்படுகின்றது.
முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்க கூடியது. இது நரம்பியல் குறைப்பாடு சார்ந்த ஒரு நோய் நிலைமையாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
மரவள்ளியின் தோலில் தான் அதிக நச்சி பதார்த்தங்கள் காணப்படுகின்றது. எனவே தோல் நீக்கி, துண்டுகளாக வெட்டி நீரில் நன்றாக கழுவிய பின்பு 50 ℃ அளவில் திறந்த பாத்திரத்தில் கொதிக்க வைத்தாலோ அல்லது சூரிய வெப்பத்தில் வெயிலில் வைக்கப்படும் போதும் அதன் நச்சுத் தன்மையை இவகுவாக நீக்கிவிடுகின்றது.
பொதுவாகவே மரவள்ளி கிழங்கை சமைக்கும் போது பாத்திரத்தை மூடி வைத்து சமைக்கக் கூடாது. பாத்திரத்தை திறந்த நிலையில் வைத்து சமைக்கும் போது மரவள்ளியில் நச்சித்தன்மை எஞ்சியிருந்தாலும் அது ஆவியாக வெளியேற்றப்படுகின்றது.
மேலும் மரவள்ளி கிழங்கை இஞ்சுடன் சேர்த்து உண்ணும் போது இந்த இரசாயன மாற்றத்தின் காரணமாக செரிமான சிக்கல்கள் மற்றும் மூச்சு கோளாறு போன்றவை ஏற்படுகின்றது.
இதன் அதிகரித்தால் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பும் உள்னதென்பது அறிவியல் உண்மை. எனவே இவற்றை சேர்த்து உண்பதை தவிர்த்துக்கொள்வது உடல் ஆராக்கியத்திற்கு நக்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |