உனக்கு என்ன அருகதை இருக்கு! குஷ்புவை ரவிமோகன் ஏன் மோசமாக திட்டினார்?
நடிகர் ரவி மோகன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகை குஷ்புவை கடுமையாக விமர்சித்து பேசியதற்கான முக்கிய காரணம் பற்றிய தகவல் வெளியாக உள்ளது.

ரவி மோகன்
ரவி மோகன் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். அது தற்போது கோர்டில் நிலுவையில் உள்ளது.
இதனால் ஆர்த்தியின் ஆதரவாளர்கள் கெனிஷாவின் சமூக வலைதள பக்கத்தில் அவரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று கெனீஷா ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதில் அவர் சென்னையை விட்டு போவதாகவும் சமூக வலைத்தள பக்கத்தை விட்டு வெளியேறுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ரவி மோகன் பத்திரிக்கையாளர்களை நேரில் அழைத்து பேட்டி கொடுத்து்ளார்.
இதில் ரவி மோகன் குஷ்புவையும் விமர்சித்துள்ளார்.

" என்னைப் பற்றிய என் முன்னாள் மனைவியின் எல்லா பதிவுகளிலும் என்னை மறைமுகமாக தாக்கி அந்த மூன்றெழுத்து இட்லி நடிகை பதிவிட்டு வருகிறார்.
அவருடைய தலைமுறையைச் சேர்ந்த மூன்று நடிகர்கள் தங்களது குடும்பத்தை அந்த பெண் கெடுக்க வந்ததாக கூறினார்கள். அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுக்க வந்த அந்த பெண் என் குடும்பத்தைப் பற்றி பேசுகிறார்.
ஆனால் வேற பிரச்சனை வந்தால் உடனே ஃபெமினிஸ்ட் வேடம் அணிந்து கொள்வார். என்ன டிராமா இது. என்ன பத்தி பேசுறதுக்கு ஏதாவது துப்பு இருக்கா.
நான் யார் நீ யார். என்ன விட நல்லா நடிப்பியா நானே உன் கால்ல விழுவேன். ஆனால் என் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட உனக்கு என்ன அருகதை இருக்கு" என குஷ்புவிற்கு பெயர் குறிப்பிடாமல் ஆவேஷமாக திட்டி உள்ளார்.

திட்ட காரணம் என்ன?
ரவி மோகன் குஷ்பு பற்றி இப்படி விமர்சித்து பேச காரணம் ரவி மோகனின் மாமியாரான சுஜாதா மற்றும் குஷ்பு நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.
ரவி மோகனும் ஆர்த்தியும் சந்தித்து இருவரும் காதலிக்க காரணமாக இருந்ததும் குஷ்பு தான்.
ரவி மோகன் விவாகரத்து அறிவித்ததில் இருந்து ஆர்த்திக்கு குஷ்பு தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆர்த்தி ரவியின் பதிவுகளில் இரண்டு குழந்தைகளை வைத்து போராடும் ஆர்த்திக்கு தைரியம் கொடுக்கும் விதமாக குஷ்பு கமெண்ட் செய்து வந்தார்.
இது தான் இன்று ரவி மோகனை இப்படி பேச வைத்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.