தொடர்ந்து மௌனம் காக்கும் விஜய்.. மன்சூரால் த்ரிஷாவிற்கு வந்த வினை- கொந்தளிக்கும் ரசிகர்கள்!
த்ரிஷா தொடர்பான சர்ச்சையொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா.
இவர் நடிப்பில் தற்போது ஏகப்பட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.
அந்த வகையில் வெற்றி நடைப்போடும் லியோ, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பலக்கோடி ரசிகர்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில், லியோ படத்தில் மன்ஞர் அலிகான்வுடன் நடித்துள்ளார்.
மௌனம் காக்கும் விஜய்
கம்பேக் கொடுக்கும் பிரதீப்- ரசிகர்களை திசைத்திருப்பி விட்டு எதிர்பாராத நேரம் உள்நுழையும் போட்டியாளர்!
ஆனால் அவருடன் ஒரு காட்சி கூட லோகேஷ் வைக்கவில்லை. ஆனாலும் த்ரிஷா குறித்து பேசிய மன்சூர் அலிகான்,.. “ த்ரிஷாவுடன் கட்டில் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். இந்த படத்தில் த்ரிஷாவை நான் காணக்கூட இல்லை.” என பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இது குறித்து கருத்து வெளியிட்ட த்ரிஷா,“ ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது. அவருடன் சேர்ந்து இனி நடிக்கமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு..” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், தமிழ் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகிய இருவரும் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |