அல்சர் வயிற்றுப்புண்ணை குணமாக்கும் 5 இயற்கை நிவாரணிகள்!
அல்சர் வயிறுவலியை போக்கும் சில உணவுகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
அல்சர் பிரச்சினை
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சரியான நேரத்தில் உணவுகள் எடுத்துக் கொள்ளாமலும், சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரம்ப காலத்திலேயே அல்சர் பிரச்சினைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், அதிகமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அல்சர் வயிற்று புண்ணை குணமாக்கும் 5 இயற்கையான உணவுகளை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அல்சர் பிரச்சினையை குணப்படுத்தும் நோய்கள்
மணத்தக்காளி கீரையை உடம்பில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடலில் பழுதுபட்ட மெல்லிய சவ்வு தோல்களை வளர செய்து வயிற்று புண்களை ஆற்றுகின்றது.
வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் உணவான பாகற்காய் மற்றும் பாகற்பழம் சாப்பிடுவது சிறந்தது.
மேலும் வாகை மரத்தின் பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்று புண் சரியாகும்.
இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிம் கொண்ட தண்டு கீரை உடலை குளிர்ச்சி ஆக்குவதுடன், மூலநோய் மற்றும் குடல் புண் சரியாகின்றது.