chanakya topic: இந்த நபர்கள் வாழ்க்கை முழுவதும் நிம்மதியிழந்து தவிப்பார்கள்... ஏன்னு தெரியுமா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கொள்ளைகள் அனைத்தையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்ட நூலே சாணக்கிய நீதியாகும், வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் கடக்க வேண்டி அனைத்து சூழ்நிலைகள் தொடர்பிலும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஒரு நபர் வாழ்க்ககை முழுவதும் நிம்மதியின்றி துன்பப்படுவதற்கு ஏதுவாக அமையும் காரணங்கள் என்னென்ன எப்பது தொடர்பில் விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
நிம்மதியை பறிக்கும் விடயங்கள்
சாணக்கியரின் கருத்துப்படி ஒழுக்கமில்லாத குழந்தையை பெற்றவர்கள், குழந்தையை சரியான முறையில் வளர்க்க தவறியவர்கள் தங்களின் பிள்ளைகளால், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இருக்கவே முடியாது.
தங்களின் பிள்ளைகளின் செயல்களால் சமூகத்தில் தலைக்குனிவை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்கள் பிள்ளைகள் பற்றி வாழ்நாள் முழுவதும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டி ஏற்படும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் யார் அதிகம் கடன் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கின்றார்களோ அவர்களால் வாழ்வில் ஒருபோதும் மன அமைதியை அடையவே முடியாது.
கடன் தொல்லைகள் இருப்பவர்கள் வாழ்கை மிகவும் நிம்மதியற்றதாகவும், அவமானங்கள் நிறைந்ததாகவும் இருக்ககும். இவர்களுக்கு மகிழ்ச்சி என்பது கானல் நீர் போன்றது. இவர்களிக் கடன் வாழ்வில் வெற்றியை நோக்கி பயணிக்கவே விடாது.
பொய் பேசும் மனைவியை அல்லது கணவனை பெற்றவர்களின் வாழ்க்கை நரகமாகிவிடும். சாணக்கியர் கருத்துப்படி திருமண உறவில் பங்கேற்கும் இருவரில் ஒருவர் பொய் சொல்லும் பழகத்தை கொண்டிருந்தால் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி மொத்தமாக பறிப்போய்விடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் துரோகம் செய்யும் வாழ்க்கை துணையை பெறுவதும் ஒருவரின் வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிடும். இவர்கள் வாழ்க்கை முழுவதும் நிம்மதியிழந்து தவிப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |