இணையத்தை கலக்கும் ‘80s Photo Trend’... வைரலாக இது தான் காரணம்!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது புதிய AI போட்டோ ட்ரெண்டுகள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வரிசையில், தற்போது 1980களின் சினிமா மற்றும் ஃபேஷன் உலகத்தை மீண்டும் உருவாக்கும் ‘80s Photo Trend’ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக, சாததாரண மக்கள் மாத்திரமற்றி திரைப்பிரபலங்களே இந்த ட்ரெண்டில் இணைந்து தங்களது ரெட்ரோ தோற்றத்திலான AI புகைப்படங்களைப் பகிர்ந்து வருவது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

படுவைரலாகும் ‘80s Photo Trend’
அந்த வகையில், சீரியல் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் 80களின் திரைப்படக் கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட AI புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அதேபோல், நடிகை ஸ்ருதி ஹாசன், உள்ளிட்ட பிரபலங்களும் 80களின் கிளாமரான ரெட்ரோ தோற்றத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து சந்தீப் கிஷன், சினேகா, மீனா, பாவனா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது புகைப்படங்களை 80களின் பாணியில் மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே தனி வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. பலரும் தங்களுக்குப் பிடித்த பழைய திரைப்படங்களின் காட்சிகள், கதாபாத்திரங்கள் மற்றும் அந்த காலத்து நடிகர்-நடிகைகளின் தோற்றங்களுடன் இந்த AI புகைப்படங்களை ஒப்பிட்டு ரசித்து வருகின்றனர்.
இதனால் ‘80s Photo Trend’ சாதாரண புகைப்பட ட்ரெண்டாக மட்டுமின்றி, ஒரு வகையான ரெட்ரோ நினைவுகளை மீட்டெடுக்கும் அனுபவமாகவும் மாறியுள்ளது.

ஏன் 80களின் பாணி இவ்வளவு பிரபலமாகிறது?
1980கள் இந்திய சினிமாவின் முக்கியமான காலகட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த காலத்தில் திரைப்படங்களில் இடம்பெற்ற ஹீரோக்களின் தனித்துவமான ஹேர் ஸ்டைல், ஹீரோயின்களின் ஃபேஷன், வண்ணமயமான உடைகள், ஸ்டுடியோ போட்டோஷூட்கள், போஸ்கள் மற்றும் ஃபிலிம் கேமராவின் தனிச்சிறப்பான நிறத்தன்மை என அனைத்துமே தனித்துவமான அழகியலை கொண்டிருந்தன.
இன்றைய நவீன டிஜிட்டல் புகைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அந்த தோற்றத்தை AI தொழில்நுட்பம் மீண்டும் உருவாக்குவதுதான் இந்த ட்ரெண்டின் முக்கிய ஈர்ப்பாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், தற்போதைய தலைமுறையினர் “நாம் 1980களில் வாழ்ந்திருந்தால் அல்லது பிறந்திருந்தால் எப்படி தோன்றியிருப்போம்?” என்ற கற்பனைக்கு ஒரு காட்சிப்பூர்வமான பதிலைப் பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில், 80களின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு இந்த ட்ரெண்ட் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. அந்த காலத்து சினிமா, ஃபேஷன் மற்றும் புகைப்படங்களின் தனித்துவமான தோற்றத்தை AI மூலம் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால், இளம் தலைமுறையினருக்கும் பழைய தலைமுறையினருக்கும் இந்த ட்ரெண்ட் ஒரே நேரத்தில் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே AI தொழில்நுட்பத்தின் நவீனத்தையும் 80களின் ரெட்ரோ அழகியலையும் இணைக்கும் புதிய டிஜிட்டல் அனுபவமாக ‘80s Photo Trend’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |