அசத்தலாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி... குவியும் லைக்குகள்
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்று அதிகாரபூர்வமாக பிரிந்தார்.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடி ஹன்சிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
நடிகை ஹன்சிகா மோத்வானி
தென்னிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தனுஷ் நடிப்பில் வெளியான ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‛ஒரு கல் ஒரு கண்ணடி, ரவி மோகனுக்கு ஜோடியாக எங்கேயும் காதல், சித்தார்துடன் தீயா வேலை செய்யனும் குமாரு, ஆர்யாவுடன் சேட்டை, விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம், சிம்புவுடன் வாலு' சிவகார்திகேயனுடன் மான் கராத்தே என அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை ஹன்சிகா கரம்பிடித்ததால் இந்த விடயம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்றும், விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.

அதனை தொடர்ந்து விவாகரத்து வழக்கில் இருவரும் ஒப்புதலுடன் (mutual consent)சட்டபூர்வமாக பிரிந்தார்கள்.தற்போது சிங்கிளாகவே வாழ்க்கை என்ஜாய் செய்யும், ஹன்சிகா மோத்வானி அடிக்கடி சுற்றுலா சென்று புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில், நாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடி ஹன்சிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |