Astrology: இந்த ராசியில் பிறந்தவங்க வெள்ளி அணிந்தால் அதிர்ஷ்டமாம்.. உங்க ராசி இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அனைத்து உலோகங்களுடன் சேர்ந்து ராசிகளில் தாக்கம் செலுத்தும்.
இதன்படி, சனிபகவான் இரும்பை ஆள்வது போல, குருபகவான் தங்கத்தை ஆள்வது போல, சந்திரன் வெள்ளியை ஆள்கிறார்.
ஜோதிடத்தின்படி, சந்திரன் தண்ணீருடன் தொடர்புடையவராக இருப்பதால் மற்ற கிரகங்களை விட இந்த கிரகம் குளிர்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையை கொண்டிருக்கும். ராசி சக்கரத்தில் சில ராசிகள் நெருப்பு ராசிகள், நீர் ராசிகள், பூமி ராசிகள், காற்று ராசிகள் ஆகிய வகைளாக பிரிக்கப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட சில ராசிகள் வெள்ளி நகைகளை அணியக் கூடாது.
அந்த வரிசையில், மேஷம், தனுசு மற்றும் சிம்மம் ஆகிய மூன்று ராசிகளும் நெருப்பு உறுப்பு ராசிகள் என்பதால் சந்திரன் ஆளும் வெள்ளியை அணியக்கூடாது.
நெருப்பு ராசியை சேர்ந்தவர்கள் வெள்ளி நகைகளை அணிவது அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதே போன்று, நீர் ராசிகள் வெள்ளி அணிவது அவர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்கச் செய்யும்.
அந்த வகையில், வெள்ளி அணிவதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் | ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி ஆபரணங்களை அணியலாம். இவர்கள் வெள்ளி நகைகள் அணியும் பொழுது வெள்ளிக்கிழமை வெள்ளி மோதிரம் அல்லது லாக்கெட் அணிவது அவர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். வியாபாரத்திலும், வேலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். |
கடகம் | கடக ராசிக்காரர்கள் வெள்ளி உலோகத்தை அணிவதால் சிறப்பான பலன்களை பெற முடியும். அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை வெள்ளி உலோகத்தை அணியும் பொழுது சிறப்பான பலன்களை பெற முடியும். பித்தளை மற்றும் தங்க உலோகங்களை அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். |
விருச்சிகம் | விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் செம்பு அல்லது வெள்ளி நிறத்தில் அணிகலன்கள் அணிய வேண்டும். ஏனெனின் இவை தான் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். வெள்ளி அணியும் பொழுது உள்ளுணர்வை வெளிப்படுத்த உதவுகிறது. எதிர்மறையான ஆற்றலிலிருந்து பாதுகாத்து புதிய அனுபவங்களை பெற உதவிச் செய்கிறது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).