கொய்யா சாப்பிட்டாலும் பக்க விளைவா? யாரெல்லாம் தவிர்க்கணும்னு தெரியுமா?
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய பழங்களின் பட்டியலில் நிச்சயம் கொய்யா முக்கிய இடத்தை பிடித்துவிடும்.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் செரிந்து காணப்படுகின்றது.

இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் கிட்டவே வர மாட்டார் என பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் ஒரு கொய்யாவில் இரண்டு ஆப்பிள் மற்றும் 2 வாழையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. எனவே தான் கொய்யாப்பழம் ஏழைகளின் ஆப்பிளாக திகழ்கின்றது.

இவ்வளவு ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் சில உடல் நலப்பிரச்சினைகள் இருப்பவர்கள் கொய்யா பழத்தை சாப்பிடுவது மேலும் ஆபத்தை அதிகரிக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் எவ்வாறான உடல் நலக்கோளாறு இருப்பவர்கள் கொய்யா பலத்தை சாப்பிட கூடாது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

யாரெல்லாம் தவிர்க வேண்டும்?
கொய்யா பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது மற்றும் சத்தானது. இருப்பினும், இந்தப் பழத்தில் அனைவருக்கும் நல்லதல்லாத கலவைகள் சில இருக்கின்றது என்பதே உண்மை.
அந்தவகையில், ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுப்பவர் அல்லது பின்வரும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் கொய்யாவைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரைப்பை குடல் பிரச்சினைகள்: குறிப்பாக கொய்யாவை சாப்பிடும்போது குமட்டல் அல்லது வயிற்று அசௌகரியம் போன்ற விரும்பத்தகாத அறிகுறிகளை உணர்கின்றீர்கள் என்றால், நீங்கள் அதைத் தவிர்க்க வேண்டும். காரணம் இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கே இவ்வதறான பக்கவிளைவுகள் ஏற்படும்.
எக்ஸிமா: எக்ஸிமா எனப்படுவது, ஒரு நாள்பட்ட அழற்சி தோல் நிலை, இது சருமத்தை சிவப்பாகவும், வறண்டதாகவும், அரிப்புடனும், சில சமயங்களில் விரிசல் அல்லது கொப்புளமாகவும் மாற்றுகிறது. இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொய்யாவை தவிர்க்க வேண்டும், காரணம் கொய்யாவில் காணப்படும் சில வேதியல் கலவைகள் எக்ஸிமா அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.

கொய்யா இலைச் சாற்றில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் தோல் எரிச்சலை ஏற்படுத்தும், குறிப்பாக எக்ஸிமா போன்ற தோல் நிலைமைகள் உள்ளவர்களுக்கு. கொய்யாவை அதிகளவில் சாப்பிடும் சிலருக்கு தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
நீரிழிவு: நீரிழிவு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் கொய்யா இலைச் சாற்றையும் கொய்யாப்பழத்தையும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம். கொய்யா மற்றும் கொய்யா இலைச் சாறுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. எனவே, அத்தகைய சப்ளிமெண்ட்களை உட்கொள்ளும்போது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும். இது சில மருந்துக்களுடன் இணையும் போது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

அறுவை சிகிச்சைக்கு முன்னர்: குறிப்பாக கொய்யாவை அறுவை சிகிச்சைக்கு முன்னர் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு மருந்தாகவோ அல்லது சப்ளிமெண்ட்டாகவோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
காரணம் கொய்யா இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். சுகாதார நன்மைகளை கருத்தில் கொண்டு கொய்யாவை சப்ளிமெண்ட்டாகப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |