தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? இந்த கஞ்சியை காலையில் 1 கப் குடிங்க
பொதுவாகவே ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஒரு இடத்தில் அமர்ந்தபடி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்ய நேரமின்மை, சரியான தூக்கமின்மை, அதிகரித்த மன அழுத்தம்,வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதும், தொப்பை போடுவதும் சாதாரணமாகிவிட்டது.

தொப்பையை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற நோக்கில் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு ரசாயன உற்பத்திகளையும் பயன்படுத்தி, நேரத்தையும், பணத்தையும் வீணடித்து, பக்கவிளைவுகளை இலவசமாக பெற்றவர்கள் ஏராளம்.
ஆனால், எந்தவித பக்க விளைவுகளும் இல்லாம் தொங்கும் தொப்பையை கடகடவென குறைத்து கட்டுக்கோப்பான உடலை வழங்கும் திணை அரிசி மசாலா கஞ்சியை எவ்வாறு தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த கஞ்சியை தொடர்ந்து 30 நாட்களுக்கு சாப்பிட்டாலே தொப்பை குறைய ஆரம்பிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
புதினா - 10 இலைகள்
மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி
திணை அரிசி - 1 கப்
தண்ணீர் - 5 கப்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
முதலில் திணை அரிசியை நீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
அதனையடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, புதினா இலைகளை சேர்த்து, 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் ஊற வைத்த திணை அரிசியை நீரில் கழுவிவிட்டு, பின் அந்த திணை அரிசியை சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
அதனையடுத்து அதில் 5 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
ஆறியதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி பரிமாறினால், சுவையான திணை அரிசி மசாலா கஞ்சி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |