ஐஸ்கிரீம் முதல் முதலில் எங்கு தயாரிக்கப்பட்டதுன்னு தெரியுமா? வியப்பூட்டும் பின்னணி!
பொதுவாகவே தற்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளின் பட்டியலில் நிச்சயம் ஐஸ்கிறீம் இடம்பிடித்துவிடுகின்றது.
பார்வைக்கு ஐஸ்கிரீம் ஒரு நவீன கண்டுபிடிப்பு போல் தோற்றமளித்தாலும், அதன் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

வரலாற்று தகவல்களின் அடிப்படையில் பார்கும் போது, ஐஸ்கிறீம் ஒரே நேரத்திலோ அல்லது ஒரே நபராலோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தெரியவருகின்றது.
ஐஸ்கிறீமை தயாரிக்கும், அதாவது உறைய வைக்கும் யோசனை படிப்படியாக வளர்ந்து வந்ததன் விளைவாகவே, இன்று நாம் மகிழ்ச்சியாக சாப்பிடும் ஐஸ்கிரீம் பெறப்பட்டுள்ளது. முதன்முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஐஸ்கிறீம் உருவான கதை
கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானியப் பேரரசர் நீரோ, தனக்குக் கொடுக்கப்படும் பழச்சாற்றில் பனிக்கட்டிகளைச் சேர்த்துச் சாப்பிட்டார் என்றும், பனிக்கட்டிகளைச் சேகரிப்பதற்காக, தன்னுடைய பணியாளர்களை பனிக்கட்டிகள் நிறைந்த மலைகளுக்கு அனுப்பி, கொண்டு வரச் செய்தார் என்றும் குறிப்பிடப்படுகின்றது. அது குறித்து சில குறிப்புகள் காணப்படுன்றது.
அதன் பின்னர் கி.மு. 200-ஆம் ஆண்டு பண்டைய சீனாவில் வாழ்ந்த மக்கள் பனிக்கட்டியால் உறையவைக்கப்பட்ட பால் மற்றும் அரிசி உறைந்த கலவையை தான் முதல் முதலில் தயாரித்தார்கள். இதுவே ஐஸ்கிரீமின் மிகவும் பழமையான வடிவமாகக் அறியப்படுகின்றது.

அதனை தொடர்ந்து கிமு 400-ஆம் ஆண்டளவில் பண்டைய இந்தியாவில் “யக்சால் (Yakhchal)” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.இது ஒரு அதிநவீன பனிக்கட்டி சேமிப்புக் கட்டமைப்பாகும். இந்த அமைப்பை பயன்படுத்தி, பாரசீகர்கள் பனிக்கட்டியுடன் குங்குமப்பூ, பழங்கள் மற்றும் ஃபலூடா போன்ற நூடுல்ஸ் சேர்த்து குளிர்ந்த இனிப்புகளை பரிமாறியதாக சில குறிப்புகள் காணப்படுகின்றது.
அது குறித்த விரிவான தகல்கள் இல்லாத போதிலும், இது ஐஸ் பயன்படுத்திய இனிப்புகள் மற்றும் ஐஸ் சார்ந்த உணவுகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகக் இருந்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதனை தொடர்ந்து கி.பி. 611 மற்றும் 907-க்கு இடையில் சீனா பெரிதும் வளர்ச்சி கண்டது. டாங் வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் தான் முதல் முதலில் எருமை, பசு மற்றும் ஆட்டுப் பால் காய்ச்சப்பட்டு, சுவையூட்டப்பட்டு, அது உறையவைக்கப்பட்டது.

பின்னர் 13ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பயணி மார்கோ போலோ சீனாவிலிருந்து உறைந்த பால் இனிப்பு வகைகள் பற்றிய தகவல்களை இத்தாலிக்குக் கொண்டு சேர்த்தார். பின்னர் இந்த சிந்தனையானது இத்தாலி முழுவதும் பரவி, பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவ ஆரம்பித்தது.
அதனை தொடர்ந்து முதல் முதலில் 1660-ஆம் ஆண்டில், பாரிஸில் உள்ள கஃபே புரோகோப் மில்க் என்ற நிறுவனம், கிரீம் மற்றும் முட்டைகளைப் பயன்படுத்தி ஐஸ்கிரீமை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அதன் பின்னர், ஜேக்கப் ஃபஸ்ஸல் அமெரிக்காவில் உலகின் முதல் ஐஸ்கிரீம் தொழிற்சாலையை 1851-ஆம் ஆண்டில் திறந்தார். அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதிலும் அனைவராலும் விரும்படும் ஒரு உணவுப்பொருளாக ஐஸ்கிறீம் வளர்ச்சி கண்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |