யார் இந்த மனோபாலா? வெளியுலகிற்கு மறைக்கப்பட்ட சில உண்மைகள்!
நடிகர் மனோபாலா நடிகர் மட்டுமல்ல திரைக்கு வராத பல வேலைகளை செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மனோபாலா எப்படி சினிமாவிற்குள் வந்தார்?
தமிழ் சினிமாவின் அடித்தளமாக இருக்கும் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தன்னை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தியவர் தான் மனோபாலா.
நடிகர் மனோபாலா நாகர்கோவில் - மருங்கூர் பகுதியில் கடந்த 1953ம் ஆண்டு பிறந்தார். இவர் ஆரம்ப காலத்திலிருந்தே கமல்ஹாசனின் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார். கமலை வைத்து பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து தன்னை சினிமாவிற்குள்ளும் அறிமுகப்படுத்தி கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பாக்யராஜை ஹீரோவாக வைத்து “பாரதிராஜா” இயக்கிய “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் என்றி கொடுத்தார்.
அந்த திரைப்படத்தில் வந்த காட்சியில் ஒல்லியான உடல்வாகு நக்கலான வசன உச்சரிப்பு என நடிப்பும் அவருக்கு சொந்தமானது என ரசிகர்களுக்கு எடுத்து காட்டினார்.
இவருக்கு இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக், கோபுரங்கள் சாய்வதில்லை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரின் முதல் படம்
நடிகனாக இருந்து கொண்டு கடந்த 1982ல் நடிகர் கார்த்திக், சுஹாசினி இருவரையும் வைத்து “ஆகாய கங்கை” என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மனோபாலாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இதனால் அடுத்தடுத்து நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, சிறை பறவை, தூரத்துப் பச்சை உள்ளிட்ட திரைப்படங்கள் இயக்கினார். அதிலும் பார்க்க இவர் நடிகர் ரஜினி காந்தை வைத்து இயக்கிய ஊர்க்காவலன் திரைப்படம் ரஜினியை ஒரு மாஸ் கதாநாயகனாக மக்களுக்கு கொண்டு சேர்த்தது.
இது போல் பிரபு, சத்யராஜ், விஜயகாந் 90 களில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த அத்தனை நடிகர்களையும் வைத்து படம் இயக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் கதை எழுதுவதிலும் வித்தகராக இருந்தார்.
இதனால் இவர் சினிமா, சீரியல் என எல்லா பக்கத்திலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இறந்த பின்னும் வாழும் சாதனைகள்
அந்தளவு முதன்மையாக இருந்து மனோபாலா ஆக்ஷன், காமெடி, குடும்ப சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களிலும் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் இவ்வளவு சிறுவயதிலேயே பலருக்கும் இவர் குருவாக விளங்கியுள்ளாராம். மேலும் சினிமா ஸ்கிரிப் எழுதவும் செய்வாராம்.
இப்படி பல சாதனைகளுக்கு சொந்தகாரராக இருந்து மனோபாலாவை நாம் சாதாரண காமெடியாளராக தான் பார்த்திருப்போம்.
ஆனால் இவரின் சாதனைகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. இப்படியொரு நிலையில் இன்றைய தினம் மிகுந்த வறுத்தமான நாளாக பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக சிறுநீரக பாதிப்பால் சிகிச்சையில் இருந்த நடிகர் உயிரிழந்து விட்டார்.
இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்களும், பிரபலங்களும் தங்கலின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.