பாரதிராஜாவின் தற்போதைய நிலை என்ன? அவரே வெளியிட்ட அறிக்கை
இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா
தமிழின் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தவாக பாரதிராஜா நடித்து அசத்திய நிலையில், இவர் பேசும் வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மருத்துவமனையில் பாரதிராஜா
கடந்த 24ஆம் தேதி பாரதிராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து தி நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று எம்ஜிம் மருத்துவனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திரையுலக பிரபலங்கள் பலரும் நலம்விசாரித்து வரும் நிலையில், பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரதிராஜா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.
#Bharathiraja Sir's statement about his Health Issue! pic.twitter.com/15BnyKJdLn
— FDFS WITH MOGI (@FfsMogi) August 27, 2022
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம். அன்புடன், பாரதிராஜா என குறிப்பிட்டுள்ளார்.