பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் இவரா? உண்மையை உடைத்த ராஜமவுலி
இந்திய சினிமாவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படமாக பாகுபலி திரைப்படம் பார்க்கப்படுகின்றது.இந்திய சினிமாவுக்கு பான் இந்தியா திரைப்படத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாகுபலி படத்தையே சாரும்.
பாகுபலி திரைப்படம்
ராஜமவுலி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதில் கதாநாயகனாக பிரபாஸ் மற்றும் வில்லனாக ராணா டகுபதி நடித்திருந்தார்.மேலும் படத்தின் கதாநாயகிகளாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.
இது தவிர ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெளியாகி 580 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான பாகுபலியின் இரண்டாம் பாகம் 2,000 கோடி வசூல் செய்து பாகுபலி முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.
இத்திரைப்படம் இந்தளவு மக்கள் மனதில் இடம்பிடிக்க அதில் நடித்த ஒவ்வொருவரும் தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியமையே காரணம்.
குறிப்பாக ராஜமாதா கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருப்பார்.
அவரை தவிற வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக அந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது எனும் அளவிற்கு அதில் தனது கதாபாத்திரத்தை சிறப்பித்திருப்பார்.
ஆனால் இயக்குநர் ராகமவுலி முதலில் ஸ்ரீதேவியை தான் ராஜமாதா கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அது குறித்து ஸ்ரீதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் அதிக சம்பளம் கேட்டதும் மற்றும் பல நிபந்தனைகளை விதித்ததுமே அந்த முடிவை கைவிட்டுவிட்டு ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்ய காரணமாகியது என ராஜமவுலி தெரிவித்துள்ளார். குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |