கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்
பொதுவாகவே ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு.
அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகள் கழிப்பறை சோப்புக்கள் என்ற வகையின் கீழ் அடங்குபவவை.
சோப்பின் உறையின் பின் பகுதியில் toilet soap என குறிபிடப்பட்டிருப்பதை நம்மில் பலரும் அவதானிப்பது கிடையாது. இதற்கான அர்த்தம் என்ன என்பதும் நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.
கழிப்பறை சோப்பு மற்றும் குளியல் சோப்பு எதன் அடிப்படையில் வித்தியாசப்படுகின்றது. எந்த சருமத்துக்கு எது உகந்தது என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
சோப்பைத் தேர்தெடுக்கும் முறை
பொதுவாக உப்பு, கொழுப்பு (Fat), காரம் (Alkaline) ,தாவர மற்றும் விலங்கின் கொழுப்புகள் சேர்ந்த கலவையில் தான் குளியல் சோப்பு மற்றும் கழிப்பறை சோப்புக்கள் தயாரிக்கப்படுகின்றது.
பிறந்த குழந்தைகளுக்குச் சருமத் துவாரங்கள் இருக்காது.பொதுவாக குழந்தைகளுக்கு மருத்துவர்கள் சோப்பை பரிந்துரைப்பதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு சோப் பயன்னடுத்தும் போது மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு பேபி சோப் மட்டுமே சிறந்தது. வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அதனால் சோப்பை சருமத்தின் தன்மைக்கு ஏற்ப தெரிவு செய்ய வேண்டியது அவசியம்.
சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த அல்லது ஆன்டிசெப்டிக் சோப்களை (Ayurvedic, Antiseptic Soap) பயன்படுத்தினால் சருமத்தில் உராய்வு ஏற்படுவதோடு சருமம் கருத்து போகவும் அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
சோப்களில் ஆரம்ப பி.ஹெச் பெறுமதி 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. இதனால் முகத்திற்கு சோப்பு பாவிப்பதை விட ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது சிறந்தது.
முகத்தின் பி.ஹெச் 5.5. ஃபேஸ்வாஷின் பி.ஹெச் பெறுமதி 6. இரண்டும் ஒத்துப்போவதால் முகத்திற்கு ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவது முகச் சருமத்தை பாதுகாக்க உதவும்.
அனைவரும் பெரும்பாலும் விளம்பரங்களை அடிப்படையாக வைத்தே சோப்புக்களை தெரியு செய்கின்றோம். ஆனால் உண்மையில் அது குளியல் சோப்தானா என்று பார்க்க மறந்துவிடுகின்றோம்.
இரண்டாவதாக, நாம் கவனிக்க வேண்டியது டிஎஃப்எம் சதவிகிதம் (Total Fatty Matter). எல்லா டாய்லெட் சோப்களிலும் டிஎஃப்எம் சதவிகிதம் இருக்கும். இதை வைத்து சோப் மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகின்றது.
டிஎஃப்எம் சதவிகிதம் 75 முதல் 80 வரை இருந்தால், அது முதல் கிரேடு சோப் என்று சோப்பின் மேலுறையில் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப்னை அனைத்து வயதினரும் பயன்படுத்த முடியும்.
டிஎஃப்எம் சதவிகிதம் 70 முதல் 75 வரை இருந்தால் கிரேடு 2 என வைகைப்படுத்தப்படுகின்றது. இதுவே கழிப்பறை சோப்பு என குறிப்பிடப்படுகின்றது. அதனை குளியலுக்கு பயன்படுத்துவது சிறந்தது. இதில் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
அதே சமயம் மென்மையான சருமம் உடையவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். 65 முதல் 70 வரை இருந்தால் கிரேடு 3 எனவும் குறிக்கப்படுகிறது.அதுவே bathing bar இந்த வகையான சோப்கள் எல்லா வயதினருக்கும் பொருந்தாது.
கிரேடு 2 மற்றும் கிரேடு 3 சோப்கள் போல கிரேடு 1 சோப்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுவது கிடையாது அதனால், சோப் வாங்கும்போது கட்டாயம் டிஎஃப்எம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு தன்மையுடையது. எனவே வாசனைக்காகவும் விளம்பரத்துக்காகவும் மாத்திரம் சோப்புகளை தெரிவு செய்வது முற்றிலும் தவறானது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |