ஜாய் கிரிசில்டாவின் முன்னாள் கணவர் யார் தெரியுமா? அவரும் சினிமா பிரபலம் தானாம்
மாதம்பட்டி ரங்கராஜை 2வது திருமணம் செய்துகொண்ட ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஜாய் கிரிசில்டா
புகழ்பெற்ற சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்து கொண்டு சர்ச்சையை கிளப்பியிருப்பவர் தான் ஜாய் கிரிசில்டா.
திருமணம் செய்த தகவலுடன் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி வருகிறார். ஆனால் இந்த திருமணம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஜாய் கிரிசில்டா பற்றிய விவரங்கள் அதிகமாக தேடப்பட்டு வருகிறது. பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் ஜாய் கிரிசில்டா விஜய்யின் ஜில்லா, ரவி மோகனின் மிருதன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து வேலைச் செய்துள்ளார்.
விவாகரத்து
இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவுக்கு இது முதல் திருமணம் அல்ல. மாறாக அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜே ஜே ப்ரெட்ரிக் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஆண் குழந்தையொன்றும் உள்ளது.
திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் பணியாற்றுவதை நிறுத்திக் கொண்ட ஜாய் கிரிசில்டா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 வருடங்களுக்கு பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
சினிமாவில் என்ன செய்கிறார்?
ஜே ஜே ப்ரெட்ரிக், ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தாள்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கோவிட் தொற்று இருந்த காலப்பகுதியில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தை இயக்க கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன்பின்னர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்த படத்தை இயக்கி வெளியிட்டார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |