2வது மனைவியால் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்- பிளாக் மெயில் செய்கிறாரா?
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் வெளியானதால் மற்றுமொரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த திருமணம் கோவிலில் மிக எளிமையான பாரம்பரிய முறையில் நடைபெற்றுள்ளது. அத்துடன் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிளாக் மெயில் செய்கிறாரா?
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை திருமணத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை ஜாய் கிரிசல்டா பகிர்ந்து, நேற்று தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இந்த ஆண்டு குழந்தை பிறக்க உள்ளது..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், அவருடைய முதல் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என குறிப்பிடடுள்ளார். இதனால் நெட்டிசன்கள் ரங்கராஜ், “ தன்னுடைய முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமலேயே ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டாரா?” எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும், மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டதாக ஜாய் கிரிசில்டா வெளியிட்டது பழைய புகைப்படங்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனின் இது ஆடி மாதம் என்பதால் திருமணம் யாரும் செய்யமாட்டார்கள். அதனால் மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிசில்டாவும் பல மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
தற்போது புகைப்படத்தை வெளியிட்ட காரணத்தால் ஜாய் மீது மாதம்பட்டி ரங்கராஜ் கடுப்பில் இருக்கிறார் என்றும் சில வேளைகளில் மாதம்பட்டி ரங்கராஜை பிளாக் மெயில் செய்வதற்காக இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும் கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        