படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தை யார்னு தெரியுமா? அட இந்த பிரபலம் தானா?

Vinoja
Report this article
படையப்பா படத்தில்'என் பேரு படையப்பா' பாடலில் வரும் சின்ன குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
படையப்பா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை தேடித்தந்த படையப்பா திரைப்படம் ரஜினியின் திரை பயணத்தில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகின்றது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி, ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் என பலரும் இதில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் வில்லியாக ரம்யா கிருஷ்ணனின் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்த திரைப்படம் ரம்யா கிருஷ்ணனின் திரை பயணத்திலும் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.இந்த படத்தின் பின்னர் நீலாம்பரி என்பது அவரின் அடையாளமாகவே மாறியது என கூறலாம்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் கே.ஸ்.ரவிக்குமார் மற்றும் ரஜினிக்கு இடையில் நிறந்த நட்பு உருவானது.
படையப்பா படத்தில் “என் பேரு படையப்பா, இளவட்ட நடையப்பா” என்ற பாடல் அப்போது பட்டித்தொட்டியெல்லாம் பிரபல்யமடைந்தது. இன்றும் கூட 90 கிட்ஸ்களின் விருப்பத்துக்குரிய பாடல்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கின்றது.
அந்த குழந்தை யார்?
இதில் பாசமுள்ள மனிதரப்பா, நான் மீசை வைத்த குழந்தையப்பா என ஒரு சிறு குழந்தையின் முகம் காட்டப்படும். இந்த பாடலின் இடையில் வரும் குழந்தைதான் தற்போது சீரியலில் கலக்கி வரும் ஹேமா பிந்து.
தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
