படத்தில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார்னு தெரியுதா? இளம்வயதில் எப்படி இருந்திருக்கார்னு பாருங்க
சிறகடிக்க ஆசை சீரியலில் கொடுமைக்கார மாமியாராக இருக்கும் நடிகையின் இளம்வயது புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றது. குறித்த சீரியல் தற்போது குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை வைத்து நகர்ந்து செல்கின்றது.
குறித்த சீரியலில் முத்து, மீனா இருவரும் தங்களுக்கு வரும் இடையூறுகளை பொறுத்துக்கொண்டு குடும்பத்தை கொண்டு செல்லும் கதையாக இருக்கின்றது.

மீனாவின் மாமியாராக இருக்கும் விஜயா முத்துவிற்கு அம்மாவாக இல்லாமல் ஒதுக்கி வைத்துள்ளார். முத்து மீனா இருவரையும் கண்ணில் கண்டாலே பயங்கரமாக திட்டித்தீர்த்து வருகின்றார்.

மாறாக பெரிய மகன் செய்யும் தவறுக்கு உடந்தையாக இருந்து பல திருட்டு வேலையையும் செய்து வருகின்றார். சமீபத்தில் கூட அண்ணாமலைக்கு தெரியாமல் சொத்தை அடமானம் வைத்துள்ளார்.
குறித்த சீரியலில் விஜயாவாக நடிக்கும் சீரியல் நடிகையின் பெயர் அணிலா ஸ்ரீகுமார் ஆகும். இவர் இளம் வயதில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இவர்களுக்கு திருமணம் நடந்து 29 வருடங்கள் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |