பிளாக் டீ, க்ரீன் டீ வரிசையில் ஒயிட் டீ.. இது குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக காலையில் எழுந்தவுடன் அனைவரும் ஏதாவது டீ குடித்து விடுவார்கள்.
டீயில் இல்லையென்றால் சிலருக்கு அன்றைய நாளே ஓடாமல் போய் விடும்.
அந்த வகையில் டீ அல்லது காபி காலையில் குடிப்பதால் மலச்சிக்கல், செரிமானம் ஆகிய பிரச்சினைகள் சரிச் செய்யப்படுகின்றன. வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் இல்லாமலாக்கப்படுகின்றது. அத்துடன் காலையில் டீ குடிப்பதால் பசி ஏற்படாது.
இரத்தயோட்டம் சீர்ப்படுத்தப்படுகின்றது. ஆனால் நாம் டீகள் பல வகை பார்த்திருப்போம்.
அந்த வரிசையில் வரும் ஒயிட் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா? சுவையிலும் நிறத்திலும் வித்தியாசமாக இருக்கும். தொடர்ந்து இந்த டீயை குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் ஏற்படுமாம்.
ஒயிட் டீ என்றால் என்ன? அதனை எப்படி தயாரிப்பது அதிலிருக்கும் நன்மைகள் தான் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஒயிட் டீ எப்படி தயாரிப்பது?
தேயிலைச் செடியில் இருக்கும் இளம் இலைகள் அதாவது அதனை குருத்துகள் என அழைப்பார்கள். இதனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீ “ ஒயிட் டீ” என அழைக்கப்படுகின்றது.
அத்துடன் குருத்துக்கள் பச்சை நிறத்திலும் அதனை மூடியிருக்கும் இலைகள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் இதிலிருந்து தயாரிக்கப்படும் டீக்கள் ஒயிட் டீ என அழைக்கப்படுகின்றது.
நன்மைகள்
1. ஒயிட் டீ குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.
2. காலையில் மற்ற டீக்களுக்கு பதிலாக ஒயிட் டீ குடிப்பதால் இதயம், சருமம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுகின்றன.
3. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக ஒயிட் டீயில் இருக்கின்றன. இது தொடர்ச்சியாக எடுத்து கொள்வதால் சருமத்தின் நெகிழ்வு தன்மை அடைந்து புரதங்கள் வலுப்படுத்துகிறது.
4. ஒயிட் டீயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து தோல் நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |