வெறும் வயிற்றில் லவங்கப்பட்டை தண்ணிர் குடிச்சா என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக இலவங்கப்பட்டை என்பது இந்திய மசாலாப் பொருள்களில் முக்கியமான ஒன்று.
இது அசைவ உணவுகளில் கட்டாயமாக பயன்படுத்துவார்கள். இதிலிருந்து வரும் வாசணை இறைச்சி வாடையை இல்லாமலாக்கி விடும்.
அத்துடன் அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு அதிகமாக நேரம் எடுக்கும் லவங்கம் போன்ற மூலிகை பொருட்கள் சேர்ப்பதால் இலகுவாக செரிமான செய்யப்படுகின்றது.
இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய நீரை தினமும் காலையில் குடித்தால் பலன்கள் இன்னும் இரட்டிப்பாக கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அப்படி என்னென்ன நன்மைகளை லவங்கம் வைத்திருக்கின்றது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
லவங்கம் ஊற வைத்து குடித்தால் என்ன நடக்கும்?
1. லவங்கம் பட்டையை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதால் செரிமான பிரச்சினை சரிச் செய்யப்படுகின்றது.
2. மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் காலையில் லவங்கம் தண்ணீர் குடித்து வந்தால் இலகுவாக மலம் கழிக்கலாம்.
3. ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினையால் ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற மாதவிடாய் பிரச்சினை ஏற்படும். இதனை லவங்கம் சீர்ப்படுத்துகின்றது. அத்துடன் கருப்பையில் உள்ள கழிவுகள் வெளியேறவும் உதவியாக இருக்கின்றது.
4. ஹார்மோன் சமநிலையின்மையால் உடல் பருமன், குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகின்றன. இதனை லவங்கம் சரிச் செய்கின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் டீ போன்று வெதுவெதுப்பான தண்ணீருடன் கலந்து எடுத்து கொள்வது சிறந்தது.
5. நீரிழிவு நோயாளிகள் டீக்கு பதிலாக இந்த பானத்தைக் குடிக்கலாம். இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |