பிக்பாஸ் பிரபலம் வீட்டில் திடீர் சோகம்.. பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் இப்படியொரு இழப்பா?
பிக் பாஸ் அக்ஷரா ரெட்டி வீட்டில் ஏற்பட்ட சோகம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருப்பது பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியேறும் போட்டியாளர்கள் மீடியா மற்றும் சினிமாத்துறையில் இலகுவாக பிரபலமாகி விடுகிறார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அக்சரா ரெட்டி. இவர் மாடல் பெண், விளம்பர படங்கள் அத்துடன் அழகி போட்டிகளிலும் பங்கேற்று பிரபலமானவர்.
டபுள் எவிக்ஷன்
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அக்ஷரா- வருண் இருவருமே நல்ல நண்பர்களாக நல்ல புரிதலுடன் கடைசி வரை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சரியாக எண்பது நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இவர்களுக்கு என தனியாக ஆர்மி எல்லாம் ஆரம்பிக்கப்பட்டு நாளுக்கு நாள் மக்களின் வரவேற்பு அதிகரித்து கொண்டே சென்றது.
இந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார்கள் டபுள் எவிக்ஷன் என்ற பெயரில் இருவரும் ஒன்றாக வெளியேற்றப்பட்டார்கள்.
இந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வெளியில் வந்தவுடன் அக்ஷரா அவர் மீதுள்ள அத்தனை சர்ச்சைகளுக்கும் சரியாக பதிலடிக் கொடுத்தார்.
இறப்பு செய்தி
அக்ஷராவின் தந்தை சுதாகர் ரெட்டி. இவர் மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கம் வென்றவர்.இவர் தொழிலதிபராக இருந்து இறந்து விட்டார்.
பின்னர் அக்ஷரா அம்மா மற்றும் அண்ணனுடன் வசித்து வகிறார். ஆனால் அம்மாவிற்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றது.
கடந்த அக்டோபர் 11ம் தேதி அவருடைய அம்மாவின் பிறந்தநாளை அக்சரா பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார். மாறாக அக்ஷராவின் சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.
கடந்த 29 ஆம் திகதி அக்சராவின் அம்மா இறப்பு செய்தி இணையத்தில் வெளியாகியிருக்கின்றது.
இந்த செய்தி கேட்டு அக்ஷரா ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |