தனிமையிலும் ஜாலியாக இருக்கும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறவி குணங்களில் அவர்களின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கமானது அதிகமாக இருக்கும்.
பொதுவாகவே அனைவருக்கும் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.இதன் காரணமாகதான் நாம் உறவுகளுடன் இணைந்து வாழ்கின்றோம்.

எந்த மனிதனுக்கும் இன்னொரு மனிதனின் உதவியின்றி வாழ்க்கையை கடக்கவே முடியாது.ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தேவையின் நிமிர்த்தம் மற்றவர்களுடன் இருந்தாலும் உண்மையில் தனிமையை தான் அதிகம் விரும்புவார்களாம்.
அப்படி தனிமையிலும் ஜாலியாக வாழத்தெரிந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு விடயத்திலும் நேர்த்தியையும், முழுமையையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எனவே இவர்கள் தங்களின் மனநிலையை மற்றவர்களுக்கு சொல்லி புரிய வைப்பதை மிகவும் கடினமாக உணர்கின்றார்கள்.
பெரும்பாலும் தங்கள் எண்ணங்களையும், வேலைகளையும் ஒழுங்கமைக்க தனிமையை நாடுகிறார்கள். இவர்கள் மற்றவர்களுடன் இருப்பது தங்களின் பழக்கங்களை பாதிப்பதாக நினைப்பதே இவர்கள் தனிமையை விரும்ப காரணமாக இருக்கும்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் லட்சியவாதிகள் மற்றும் கடின உழைப்பாளிகள், தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களுடன் பழகும் போதும் சரி, நேரம் செலவிடும் போதும் சரி தங்களின் தொழில் மற்றும் இலக்கு பற்றியே பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்ளின் கொள்கைகளுடன் பொருந்தும் நபர்களை கண்டறிவது மிகவும் கடினம் என்பதால்,இவர்கள் தனிமையில் இருப்பதையே மகிழ்ச்சியாக நினைக்கின்றார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களை எப்போதும் சுயபரிசோதனை செய்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தவும், தங்கள் உணர்வுகளை மீட்கவும் எப்போதும் தனிமையில் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே மர்மமான குணத்துக்கும், ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே தான் மற்றவர்களுடன் இருப்பதை விடவும் தனிமையில் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |