ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என தொன்று தெட்டு நம்பப்பட்டு வருகின்றது.
கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவது மட்டுமின்றி, சில கிரகங்கள் அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும் மேலும் சில முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் அவ்வப்போது அரிய ராஜ யோகங்களும் உருவாகும்.

அந்த வகையில் மே 23 ஆம் திகதியான இன்று அறிவாற்றலின் கிரகமான புதன் மற்றும் அழகு, காதலின் கிரகமான சுக்கிரன் ரிஷப ராசியில் உதயமாகவுள்ளதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
இருப்பினும் இந்த புதன், சுக்கிரன் ரிஷபத்தில் உதயமாவதால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி ரதீயில் அமோக பலன்கள் கிடைக்கப்போகின்றது. அப்படி உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாவதால் இவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியடும் அதிகரிக்கும்.
இவர்கள் இந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கும் எந்த வேலையிலும் அமோக வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும்.
வணிகர்கள் ஈடுப்பட்டு வருவர்களுக்கு எதிர்ப்பாராத வகையில் லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி சுக்கிரன் ஆசியால் தம்பதியினரிடையே காதல் அதிகரிக்கும்.
கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகியிருப்பதால், இவர்களின் தொழிலில் அசுர வளர்ச்சி உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவற்கான வாய்ப்பு கிட்டும். நிதி நிலை சீராகும்.
நீண்ட நாள் கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் வகையில் நிதி நிலையில் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் தாாகவே கூடிவரும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியான சூழலும் உருவாகும். இவர்களின் வாழ்க்கையில் இருந்துவந்த நீண்ட நாள் துன்பங்கள் நீங்கி ஒரு மகிழ்ச்சியான சூழலை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும்.
கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளதால் இவர்களுக்கு குறைந்த முயற்ச்சியிலேயே காரியங்கள் வெற்றியாகும்.
குறிப்பாக நிதி நிலையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி செல்வ செழிப்பு விரைவாக அதிகரிக்கும். பணவரவு பல வழிகளில் இருந்தும் கிடைக்க வாய்ப்புள்ளது. சேமிப்புக்கு வாய்ப்புண்டும.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான நிலை உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |