இந்த ராசியினர் அனைவரையும் சமமாக மதிப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த அவைரும் மற்றவர்கள் தங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் தங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுவது வழக்கம்.
ஆனால் நாம் மற்றவர்களுக்கு எந்தளவுக்கு மரியாதை கொடுக்கின்றோம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அனைவருக்கும் மதிப்பளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி சாதி, மதம், இனம், மொழி, பணக்காரர், ஏழை என எந்தவித பாகுபாடும் இன்றி மற்றவர்களை சமமாக மதிக்கும் உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலா ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவதால், இயற்கையாகவே வசீகர தோற்றமும் கணிவான நடத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் நீதியை பின்பற்றி நடப்பதை தங்களின் முக்கிய கொள்கைகளுள் ஒன்றாக வைத்திருப்பார்கள்.
இவர்கள் தராசுகளால் அடையாளப்படுத்தப்படுவதை போல் அனைவரையும் பேதமின்றி சமமாக மதிக்கும், அன்பு செலுத்தும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் தங்களின் உணர்வுகளை போல் மற்றவர்களின் கருத்துக்களுக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் மனிதாபிமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் அனைவரையும் சமமாக பார்க்கும் குணம் நிச்சயம் இருக்கும்.
இவர்களிடம் வலுவான சமூக நீதி உணர்வு காணப்படுவதுடன் எப்போதும் சமத்துவம் மற்றும் நியாயத்திற்காக போராடுவதற்கு தயங்காதவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மனித உரிமைகள் மற்றும் மற்றவர்களின் நலனை ஊக்குவிக்கும் செயல்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் குருபகவானால் ஆளப்படுவதால், இயல்பாகவே நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் உண்மை மற்றும் நீதிக்கு மதிப்பளிப்பதுடன் அனைத்து உயிர்களையும் சமமாக மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களின் துன்பத்தை சொல்லாமலேயே புரிந்துக்கொண்டு உதவிசெய்யும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |