யாழில் கடலுக்கு அருகில் நன்னீர் ஊற்று... நீரில் மருத்துவ குணம்
பொலிகண்டி ஊறணி வைத்தியசாலைக்கு வடக்கே கடலுடன் இணைந்து காணப்படும் ஊறணி ஊற்று வல்வெட்டித்துறைக்கு இயற்கை தந்த கொடை என்றால் மிகையாகாது.
இந்த ஊறணியில் வருடாவருடம் இக்காலப்பகுதியில் இயற்கையினால் நீர் நிரப்பப்படுகின்றது.2அடி, 3அடி, 4அடி, வரை நீர் மட்டம் உயரும் நிலையில் சிறியவர் தொடக்கம் நடுத்தர மட்டத்தில் உள்ளவர்கள் இதில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
முன்னர் மழை காலத்தில் ஊற்றிலிருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் காட்சி மிகவும் அற்புதமானது எனவும். இந்நீர் மருத்துவக்குணம் நிறைந்ததாகவும் சிரங்கு, வாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குவந்து நீராடிச் செல்வதாகவும் இப்பகுதியிலுள்ள முதியோர் குறிப்பிடுகின்றனர்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊறணி ஊற்று தொடர்பான பல சுவாரஸ்யமான விடயங்களை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |